ஊரே வியக்கும் மாற்றம்! விரைவில் சென்னை ஏர்போர்ட்டில்.. அந்த மேட்டரை கையில் எடுத்த விமான நிலைய ஆணையம்
சென்னை: தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் பல முக்கிய மாற்றங்கள் வர உள்ளது. இது வரும் காலத்தில் விமானச் சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியாவிலே மிகவும் பிஸியான ஏர்போர்ட்களில் ஒன்றாகச் சென்னை ஏர்போர்ட் இருக்கிறது. சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த ஏர்போர்ட்டில் இருந்து தினசரி ஏகப்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் 5ஆவது பிஸியான ஏர்போர்ட்டாக இருக்கும் சென்னை ஏர்போர்ட்டில் மேலும் பல மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக பீக் ஹவர்ஸில் அதிக உள்நாட்டு விமானங்களுக்கு இடமளிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
விமான நிலையம்: சென்னை ஏர்போர்ட்டில் சர்வதேச விமானங்களுக்கு ஏற்கனவே புதிதாக முனையம் திறக்கப்பட்டுள்ளது. இதனைப் பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாத கடைசியில் திறந்து வைத்தார். படிப்படியாக விமான நிறுவனங்கள் புதிய முனையத்தில் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கின. இப்போது சர்வதேச விமானங்கள் அனைத்தும் புதிய முனையத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அங்குள்ள பழைய சர்வதேச முனையத்தையும் (T4) பயன்படுத்தாத நிலையில் உள்ள ஒரு தளத்தையும் இந்திய விமான நிலைய ஆணையம் கையில் எடுத்துள்ளது. அங்குத் தேவையான மாற்றங்களைச் செய்து.. அங்கிருந்து உள்நாட்டு விமானங்களை இயக்குவதே அவர்களின் திட்டம். இதன் மூலம் ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தின் இருபுறமும் உள்நாட்டு முனையங்கள் இருப்பது போல இருக்கும். பயணிகளும் எளிதாக விமானங்களை மாறலாம்.
முக்கிய மாற்றங்கள்: பழைய முனையத்தில் தரை தளம் கடந்த 2013ஆம் ஆண்டு முதலே பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இங்கே பாதுகாப்பு ஆய்வு நடத்தப்பட்டு, விமானச் சேவையை மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இந்தத் தளம் சரக்குகளைக் கையாளும் வகையில் மாற்றியமைக்கப்படும். அங்கு 3 பேக்கேஜ் கன்வேயர்கள் அமைக்கப்பட உள்ளது. அதேபோல முதல் தளம் உள்நாட்டுப் புறப்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும்..
இது சென்னை ஏர்போர்ட்டிற்கு இந்தக் காலத்தில் தேவையான பூஸ்ட்டை கொடுக்கும். இப்போது சென்னை ஏர்போர்ட்டால் ஆண்டுக்கு 1.5 கோடி பயணிகளைக் கையாள முடிகிறது. இந்த தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டால் சென்னை ஏர்போர்ட்டால் ஆண்டுக்கு 1.9 கோடி பயணிகளைக் கையாள முடியும் என்று கூறப்படுகிறது.
அதிக விமானங்கள்: இந்த பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும் எனத் தெரிகிறது. இதன் மூலம் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வேற லெவலில் அப்டேட் ஆகும் எனத் தெரிகிறது. இதன் மூலம் வரும் காலத்தில் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து அதிக அளவில் விமானங்களைக் கையாள முடியும். அதன்படி வரும் நாட்களில் சென்னை ஏர்போர்ட்டால் கூடுதல் விமானங்களைக் கையாள முடியும். அதேபோல பீக் ஹவர்ஸுக்கு வெளியே சில விமானங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிகிறது.

இப்போது சென்னை ஏர்போர்ட்டில் காலை மற்றும் மாலை பீக் ஹாவஸில் 30க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த மாற்றத்திற்குப் பிறகு சென்னை ஏர்போர்ட்டிற்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிளான் என்ன: இன்னும் பல மாற்றங்களையும் சென்னை ஏர்போர்ட்டில் செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. பழைய சர்வதேச வருகைக் கட்டிடத்தையே முழுமையாக இடித்துவிட்டு புதிய முனையத்தைக் கட்டவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது எதிர்காலத்தில், விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் சேவையை மேம்படுத்த உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு ஏற்கனவே பரந்தூரில் புதிதாக விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய ஏர்போர்ட் பயன்பாட்டிற்கு வந்தாலும் பழைய ஏர்போர்ட் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீனம்பாக்கம் ஏர்போர்ட் தொடர்ந்து திறம்படச் செயல்பட இதுபோன்ற பணிகள் முக்கியமானதாக இருக்கும்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications