"2 பச்சைக்கிளி" பறந்துடுமோ.. "அவர்" இங்கேயே கிளம்பி வருகிறாரேமே.. என்னவா இருக்கும்.. அனலடிக்கும் கமலாலயம்
ஜேபி நட்டா தமிழகம் வரும்போது பாஜகவின் உட்கட்சி பூசல் குறித்து ஆலோசனை நடத்துவாரா
சென்னை: தமிழக பாஜகவில் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் 10 தொகுதிகளையாவது வென்றுவிடும் முனைப்பில் பாஜக ஈடுபட்டு வரும் நிலையில், தேசிய தலைவர்களின் வருகை ஆரம்பமாகி உள்ளது.. அந்தவகையில், நட்டா தமிழகம் வரும் நிலையில், நீலகிரி மற்றும் கோவை தொகுதிகள் குறித்த தேர்தல் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.. மேலும், வேறு சில விஷயங்கள் குறித்தும் பாஜகவின் முக்கிய தலைவர்களிடம் நட்டா விவாதிக்கப்படலாம் என்பதால், எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறி வருகின்றன.
எம்பி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக பலவீனமாக உள்ள 144 தொகுதிகளில் பாதி தொகுதிகளுக்கு, ஜேபி நட்டா நேரடியாகவே செல்ல திட்டமிட்டுள்ளார். மீதமுள்ள தொகுதிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் செல்வார்கள் என்று தகவல்கள் வெளியாகின.
அந்தவகையில் தமிழகம் வரும் நட்டா, சில முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. காரணம், சமீபகாலமாகவே தமிழக பாஜகவில் நிறைய பரபரப்புகள் நடந்து வருகின்றன.. முதலாவதாக, பாஜகவில் திருச்சி சூர்யாவும், டெய்சி பேசிய ஆபாச ஆடியோ வெளியாகி சர்ச்சையானது..

வலதுகரம்
அதில் கட்சியின் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் குறித்தும் ஆபாச குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. அது குறித்து விசாரித்த பிறகு பாஜக விசாரணைக்குழுவின் பரிந்துரையின்படி சூர்யா பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் டெய்சி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் திருச்சி சூர்யா, கட்சியில் இருந்து வெளியேறினார். தன்னை திட்டமிட்டு பேச வைத்து சிக்க வைத்து விட்டதாகவும், இதற்கு பின்னால் அமர்பிரசாத் என்ற நிர்வாகி இருப்பதாகவும், அவர் அண்ணாமலையின் வலதுகரமாக இருந்தவர் என்றும் சூர்யா குற்றம்சாட்டியிருந்தார்.. சூர்யாவின் குற்றச்சாட்டுகள் கட்சிக்குள்ளேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.. எனினும் இதுகுறித்து பெரிதாக சீனியர் தலைவர்கள் எதுவும் பேசவில்லை..

ஹோப் வானதி
இரண்டாவதாக, காயத்ரி ரகுராமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. இதுகுறித்து தன் தரப்பு நியாயத்தை, மாநில தலைமை கேட்கவில்லை என்றும் தன்னை அழைத்து பேசவேயில்லை என்றும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார் காயத்ரி.. அதனால் தன்னிலை விளக்கம் தருவதற்காக மேலிட தலைவர்களை சந்திக்க பலவகைகளில் முயன்றும், அது நடக்கவில்லை என்று காயத்ரி தரப்பில் வருத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.. அதுமட்டுமல்ல, தன்னுடைய புகாரை மூத்த தலைவர் வானதி சீனிவாசனிடம் தந்தபோது, அதை மேலிடத்துக்கு அனுப்பி வைத்து காயத்ரிக்கு, வானதி நம்பிக்கையை சொன்னதாகவும்கூட செய்திகள் கசிந்தன. ஆனால், அதுகுறித்த செய்திகளும் என்ன ஆனது என்று தெரியவில்லை.

டெய்ஸி
மூன்றாவதாக, மேலிட தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கேட்டும், இதுவரை கிடைக்காத விரக்தியில் நொந்து போயுள்ள காயத்ரிக்கு, கதர் கட்சியின் ஆதரவு வலை வீசி வருவதாக சொன்னார்கள்.. அதேபோல, ஆடியோ மூலம் பரபரப்பை கிளப்பிய டெய்ஸி-க்கு திமுக பக்கம் இழுக்க முயற்சி நடப்பதாகவும் செய்திகள் வந்தன.. இதற்கு காரணம், டெய்சியையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று சிலர் அழுத்தம் தருகிறார்களாம்.. இந்த விஷயம் தெரிந்துதான், டெய்ஸி பக்கம் திமுக தூது விட்டிருப்பதாக சொன்னார்கள்.. ஒருபக்கம் காயத்ரி, மறுபக்கம் டெய்ஸி என எதிர்க்கட்சிகள் தூண்டில் வீசிவருவதாக தெரிகிறது.

சலசல முணுமுணுப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான், கட்சி தலைவர் நட்டா தமிழகம் வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. தேர்தல் ஆலோசனைக்காக நட்டா இங்கு வருவதாக தெரிகிறது.. குறிப்பாக, கோவை மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில், தேர்தல் பணிகளை தொடங்குவது தொடர்பான ஆலோசனை நடத்த போவதாக சொல்கிறார்கள்.. இதனால் தமிழக பாஜக மிகுந்த உற்சாகத்திலும், பெருத்த நம்பிக்கையிலும் உள்ளது.. எனினும், தமிழகம் வரும் நட்டா, மேற்கண்ட பாஜகவின் சலசலப்புகள் குறித்தும், சர்ச்சைகள் குறித்தும் மாநில தலைவரிடம் ஆலோசனை நடத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.

அவசர அவசரமாய்
பாஜகவின் மையக்குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில், அவசர ஆலோசனை கடந்த வாரம் நடந்தது.. அந்த கூட்டத்தில், தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி, மாநில தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் பாஜ நிர்வாகிகள் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, மூத்த தலைவர்களை அனுசரித்து செல்லும்படி அண்ணாமலைக்கும் ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.

சாயும் பாமக
எனினும், தமிழகம் வரும் நட்டாவிடமும் சீனியர்கள் இதுகுறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. அதே நேரத்தில் கூட்டணி குறித்தும் ஆலோசிக்க நிகழுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.. அதிமுகவில் இன்னும் சுமூக சூழல் எழாத நிலையில், அக்கட்சியுடன் எப்படி கூட்டணி பற்றி பேச முடியும்? அப்படியே பேசினாலும், எடப்பாடி + ஓபிஎஸ் என இரு தரப்பிலும் தனித்தனியாக பேசப்படுமா? என்று தெரியவில்லை.. பாஜக - திமுக கூட்டணி என்று சிவி சண்முகம் சொன்னதால், பாஜக கடுப்பில் உள்ளது.. எனவே, அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இந்த முறை நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அதேபோல, பாமகவின் நிலைப்பாடும் இதுவரை தெரியவில்லை.

விஜயகாந்த்
திமுகவுடன் கூட்டணி வைக்க பாமக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.. அதற்கேற்றபடி பாமக குறித்து எடப்பாடியோ, எடப்பாடி பற்றி அன்புமணியோ இதுவரை வெளிப்படையாக கூட்டணி குறித்து பேசவில்லை. பாஜகவும் பாமக பற்றி எந்த கருத்தையும் சொல்லாமல் உள்ளது.. எனவே, அதிமுகவை போலவே பாமகவிடமும், கூட்டணி பேச இப்போது வாய்ப்பிருக்காது என்கிறார்கள்.. விஜயகாந்த் கட்சியின் "மூவ்"கள் குறித்தம் எதுவுமே தெரியவில்லை.. ஆக, தமிழகம் வரும் நட்டா, நீலகிரி, கோவை தொகுதிகள் குறித்த தேர்தல் ஆலோசனையில் ஈடுபட உள்ள நிலையில், உட்கட்சி பூசல்கள் குறித்தும் மாநில நிர்வாகிகளிடம் விவாதிக்கலாம் என்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், நட்டாவின் தமிழகம் வருகை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது...!!!
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா? அதனால நாங்கள் டெல்லிக்கு போறோம்! என்ன தவறு? தினகரன் -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்!












Click it and Unblock the Notifications