2 "ராஜா"க்கள்.. 6 புள்ளிகள்.. பாஜகவுக்கு வந்த டென்ஷன்.. விரட்டி துரத்தும் "சாமி.. என்ன நடக்கிறது?
சுப்பிரமணியசாமி, இளையராஜா போன்றோருக்கு எம்பி பதவி கிடைக்குமா
சென்னை: 6 நியமன எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், பாஜகவில் இந்த பதவிக்கான போட்டி அதிகரித்துள்ளது..!
ராஜ்யசபாவில் இப்போதைக்கு மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர்.. இதுதவிர மத்திய அமைச்சரவையின் பரிந்துரையில் 12 எம்பிக்களை ஜனாதிபதியே நேரடியாக நியமனம் செய்வார்.
அப்படித்தான், கடந்த 2016-ல் 6 பேர் நியமனம் அதாவது, நடிகர் சுரேஷ் கோபி, மேரி கோம் , சுப்பிரமணியசாமி, நரேந்திர ஜாதவ், ரூபா கங்குலி, ஸ்வவன்தாஸ் குப்தா ஆகிய 6 எம்பிக்களும் நியமனம் செய்யப்பட்டனர்.

நியமனம்
இவர்களின் பதவிக்காலம்தான், 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.. எனவே, அடுத்த புதிய எம்பிக்களை நியமனம் செய்ய வேண்டிய கட்டாயமும், அவசியமும், பாஜக மேலிடத்துக்கு ஏற்பட்டுள்ளது.. மற்ற எம்பிக்களை போல அல்லாமல், இது நியமன எம்பிக்கள் என்பதால், பரவலாக அனைத்து துறைகளையும் உள்ளடக்கியே நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. கலை, இலக்கியம், பத்திரிகை, விளையாட்டு என பலதுறைகளில் சாதனை படைத்தவர்களை, ராஜ்யசபாவுக்கு அனுப்பும் வழக்கம் இருந்து வருகிறது..

சுப்பிரமணிய சாமி
இந்த லிஸ்ட்டில், அரசியல் துறையையும் சேர்க்கப்பட்டு அதில் இணைந்தவர்தான் சுப்பிரமணியசாமி.. இவருக்கும் சேர்த்துதான் தற்போது பதவிக்காலம் நிறைவடைகிறது.. ஏற்கனவே தனக்கு சீட் கொடுப்பார்கள் என்று காத்திருந்தவர் சு.சாமி.. அதிலும் நிதியமைச்சராக தன்னை நியமிக்க வேண்டும் என்று பலமுறை பேசியவர்.. அதனால்தான் இப்போதுவரை, பாஜகவிலேயே இருந்தாலும் நிர்மலா சீதாராமன் எந்த அறிவிப்பு வெளியிட்டாலும், முந்திக் கொண்டு வந்து குறை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அரசல் புரசல்
தன்னுடைய எம்பி பதவியும் முடியும் நிலையில், மறுபடியும் இதே பதவிக்காக காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார்.. பாஜகவில் இருந்து கொண்டே, சேம்சைடு கோல் போடும் சு.சாமிக்கு பதவி கிடைக்குமா? என்று தெரியவில்லை.. காரணம், வெளிப்படையாகவே மோடி அரசை அட்டாக் செய்து வருகிறார்.. இவருக்கு மீண்டும் போஸ்டிங் தருவதற்கு, அமித்ஷா, மோடி இருவருக்குமே விருப்பமில்லையாம்.. இப்போது பதவி கிடைக்காது என்ற அரசல் புரசல் செய்தி கசியவும், இன்னும் மோசமாக மத்திய அரசை விளாச ஆரம்பித்துவிட்டார்.

எச்.ராஜா
எனவே இவருக்கு பதவி கிடைக்காது என்றே தெரிகிறது.. இதற்கு அடுத்தபடியாக பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா இருவரும் லிஸ்ட்டில் உள்ளனர்.. கேரள ஆளுநர் பதவிக்கு எச்.ராஜா நியமிக்கப்படுவதாக செய்திகள் கசிந்து வந்த நிலையில், அதை பற்றி உறுதியாக தெரியவில்லை.. சினிமா துறை சார்பாக எந்த யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. காரணம், இதிலும் இளையராஜா பெயர் அடிபட்டு வருகிறது.. இதுவும் உறுதியாக தெரியவில்லை.. ஆனால் ரஜினியின் பெயரும் டெல்லியில் உச்சரிக்கப்படுகிறது.

இளையராஜா
அறிவியல் துறை சார்பாக, இஸ்ரோ விஞ்ஞானி சிவன் பெயரும் இந்த பரிசீலனையில் உள்ளது.. அதேபோல, தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட பலரின் பெயர்களும் லிஸ்ட்டில் உள்ளன.. இவர்கள் அனைவரையுமே பாஜக மேலிடம் பரிசீலித்து வருகிறதாம்.. சம்பந்தப்பட்டவர்களை டெல்லிக்கே வரவழைத்தும் பேசி வருகிறது.. எப்படிப்பார்த்தாலும் நாளைக்குள் இந்த லிஸ்ட் தயாராகிவிடும் என்கிறார்கள்.. இவர்களில் இளையராஜாவுக்கு பதவி கிடைக்குமா என்பதுதான் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.. பார்ப்போம்..!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications