தென் சென்னையை வெல்வது யார்? திமுக ஓட்டை பிரிக்குமா பாஜக? ஆளுநர் பதவியை விட்டுட்டு வந்தாரே தமிழிசை?
சென்னை: தென்சென்னை தொகுதியில் யார் வெற்றி பெற போகிறார்களோ? என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் எகிறி வருகிறது.
1951-ல் நடந்த முதல் மக்களவை தேர்தலில் "மெட்ராஸ்? தொகுதியில் தென் சென்னையும் அடங்கியிருந்தது. தொகுதி மறுசீரமைப்புக்குபிறகு, தென் சென்னை தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் தொகுதிகள் இணைக்கப்பட்டன. இதில், தமிழகத்தின் அதிக வாக்காளர்களை கொண்டது சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் பகுதிகளில் பிராமணர்கள் அதிகமாக வசித்து வந்தாலும், முதலியார், மீனவர்கள், தலித்துகள் என்று பலதரப்பட்ட மக்களையும் கொண்டதுதான் இந்த தென் சென்னை தொகுதியாகும்.
அதேபோல, அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் என்று படித்தவர்கள் எண்ணிக்கையும் இந்த தென்சென்னை தொகுதியில் அதிகம்.. இதற்கு நடுவில், ஐடி கம்பெனிகள், வெளியூர்களிலிருந்து வந்து தங்குபவர்களும் இந்த தென் சென்னையில்தான் அதிகம்.
அந்தவகையில், நகரம், கிராமம் என அனைத்து தரப்பு மக்களையும் கொண்டதே இந்த தென்சென்னை தொகுதி.. எனவே, யாருக்குமே ஒரே இடத்தில் ஓட்டுக்கள் குவியும் வாய்ப்பு கிடையாது.
வேட்பாளர்கள்: இந்த முறை லோக்சபா தேர்தல் திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன் - அதிமுக சார்பில் ஜெயவர்த்தன், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி ஆகியோர் களம் கண்டுள்ளனர்.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
பேரறிஞர் அண்ணா, டி. டி. கிருஷ்ணமாச்சாரி, முரசொலி மாறன், இரா. வெங்கட்ராமன், வைஜயந்தி மாலா பாலி, டிஆர் பாலு ஆகிய புகழ் பெற்றவர்கள் வென்ற தொகுதி இது. தென் சென்னை தொகுதி திமுக வசம் அதிக முறை இருந்துள்ளது. மொத்தம் 7 முறை திமுக வென்றுள்ளது. அடுத்தபடியாக இதை காங்கிரஸ் 5 முறை கைப்பற்றியுள்ளது. இங்கு அதிமுகவுக்கு இரண்டு முறை வெற்றி கிடைத்துள்ளது
14 ஆவது மக்களவை தேர்தல் (2004)
திமுக டிஆர் பாலு 5,64,578.
அதிமுக பதர் சயீத் 3,43,838.
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
இராஜேந்திரன் அதிமுக 3,08,567
பாரதி திமுக 2,75,632
வி. கோபிநாத் தேமுதிக 67,291
இல. கணேசன் பாஜக 42,925
சரத்பாபு சுயேச்சை 15,885
டிராபிக் இராமசாமி சுயேச்சை 1,693
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
ஜெ. ஜெயவர்த்தன் அதிமுக 4,38,404
டிகேஎஸ் இளங்கோவன் திமுக 3,01,779
இல. கணேசன் பாஜக 2,56,786
எஸ். வி. ரமணி இதேகா 24,420
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக 5,64,872
ஜெ. ஜெயவர்த்தன் அதிமுக 3,02,649
ஆர். ரங்கராஜன் மநீம 1,35,465
ஏ. ஜே. ஷெரின் நாதக 50,222
ஈ. சுப்பைய்யா அமமுக 29,522
நோட்டா - - 16,891












Click it and Unblock the Notifications