ஹிட் லிஸ்ட்..சம்மதிச்சிடுச்சா திமுக? இதுதானா தமிழக காங்கிரஸ் தொகுதிகள்? மாறி மாறி மல்லுக்கட்டறாங்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் இறுதி பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதால், தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவ துவங்கி உள்ளது.

கடந்த தேர்தலை போலவே, காங்கிரசுக்கு 10 சீட்டுகளை ஒதுக்கியிருக்கிறது திமுக.. தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி "போராடி" பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

Big Expectations in the tamil nadu congress and the Final list of Congress constituencies list will be published today

திமுக கூட்டணி: வெறும் 6 சீட் மட்டுமே ஒதுக்கப்படும் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டதாம்.. ஆனால், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் 15 சீட்டுகளை தர வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருந்தார்.. இதற்குபிறகு புதிதாக தலைமை பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகையும் எப்படியாவது இரட்டை இலக்கத்தில் சீட்டை பெற வேண்டும் என்பதிலேயே முனைப்பு காட்டினார்.

இறுதியில் கடுமையாக முயற்சி செய்து, 10 தொகுதிகளை பெற்றுக் கொண்டது காங்கிரஸ்.. இப்போது அடுத்த சிக்கல் என்னவென்றால், இந்த 10 தொகுதிகளிலும் யார்? யார்? போட்டியிடுவது என்பதில் காங்கிரசுக்குள் புயல் அடித்து கொண்டிருக்கிறது.

உறுதியான தொகுதிகள்: கன்னியாகுமரி தொகுதியில் விஜய்வசந்த், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரம், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் போட்டியிடுவதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.. இவர்களுக்கெல்லாம் தொகுதிகள் எளிதாகவே இறுதி செய்யப்பட்டுவிட்டன..

Big Expectations in the tamil nadu congress and the Final list of Congress constituencies list will be published today

ஆனால், கரூர், திருச்சி, திருவள்ளூர், தேனி, ஆரணி போன்ற தொகுதிகளில் தான் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும், தொகுதிகளை இறுதி செய்வதிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.. கடுமையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன..போட்டிகளும் அதிகரித்தபடியே உள்ளது.

கரூர்: அநேகமாக, கரூர், திருச்சி, தேனி தொகுதிகள் மாற்றப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.. அப்படி தொகுதிகள் மாறக்கூடுமானால், கரூர் தொகுதியில் மறுபடியும் ஜோதிமணியே வேட்பாளராக அறிவிக்கக்கூடும் என்கிறார்கள்.. அதேபோல, திருச்சி, தேனி தொகுதிகள் மாற்றப்படும் என்றிருந்த நிலையில், இந்த லிஸ்ட்டில் ஆரணி தொகுதியும் சேர்ந்துள்ளது..

எனவே, திருச்சி, தேனி, ஆரணி இந்த 3 தொகுதிகளுக்கு பதிலாக, நெல்லை, கடலூர், கள்ளக்குறிச்சி தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

தீவிர ஆலோசனை: எனினும் யாருக்கு எந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், மாநில முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போன்றவர்கள் டெல்லி மேலிட தலைவர்களுடன் ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதாவது ஆரணிக்கு பதிலாக கடலூர், திருச்சிக்கு மாற்றாக மயிலாடுதுறை, கரூருக்கு மாற்றாக ஈரோடு போன்ற தொகுதிகளை கோரலாமா? என்பது குறித்து நேற்றையதினம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வது, அகில இந்திய தலைவர் கார்கே தலைமையில் பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டம் நடத்துவது மற்றும் தொகுதியில் செல்வாக்குள்ள வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இறுதியாகும் தொகுதிகள்: இறுதியில், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், கரூர் தொகுதியில் ஜோதிமணி ஆகியோர் போட்டியிட இருப்பது மட்டும் உறுதியாகி உள்ளதாம். ஆரணி, திருவள்ளூர், நெல்லை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகள் குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவைகளில் 5 தொகுதிகளுக்கு கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, டாக்டர் செல்லக்குமார், சசிகாந்த் செந்தில், வக்கீல் சுதா, பிரவீன் சக்கரவர்த்தி, விஷ்ணுபிரசாத், விஸ்வநாதன், எம்.பி.ரஞ்சன்குமார் போன்றோர் லிஸ்ட்டில் ரேஸில் உள்ளனர்.

இன்று வெளியீடு: யார்? யார்? எந்தெந்த தொகுதியில் போட்டியிடப்போகிறார்கள் என்பது பற்றி தெரியவில்லை. எப்படியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் இறுதிப்பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+