புதுமைப்பெண்.. போனை திறந்தால் குட்நியூஸ்! 1 லட்சம் மாணவிகளுக்கு முதல்வர் அனுப்பிய மெசேஜ்! செம ஸ்பீட்
சென்னை: தமிழ்நாடு முழுக்க இன்று ஒரே நாளில் 1 லட்சம் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் தொடர்பாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆசிரியர் தினத்தில் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த பட்ஜெட்டில் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டிலேயே உடனுக்குடன் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

என்ன திட்டம்?
கடந்த தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்' மாற்றப்படுவதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் பல காலமாக அமலில் இருந்தது. இதன் மூலம் பல பெண்களின் திருமணத்திற்கு உதவிகள் செய்யப்பட்டது. ஆனால் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும், பெண்களுக்கு திருமணத்திற்கு உதவுவதை விட கல்விக்கு உதவுவது சிறந்தது. அவர்களே இதன் மூலம் திருமணத்திற்கு பணம் சேர்க்க முடியும் என்ற முடிவை எடுத்தது.

வரதட்சணை
அதோடு தாலிக்கு தங்கம் கொடுப்பது மறைமுகமாக வரதட்சணையை ஆதரிக்கும் வகையில் இருக்கும் என்பதாலும், நேரடியாக மாணவிகளுக்கு பணம் கொடுப்பதன் மூலம் பல மாணவிகள் இதனால் பலன் அடைவார்கள் என்பதாலும் திட்டம் மாற்றப்பட்டது. அதோடு பெண்கள் இதன் மூலம் அதிக அளவில் மேற்படிப்பை படிப்பார்கள் என்பதாலும் இந்த திட்டம் கல்வி உதவித்தொகை திட்டமாக மாற்றப்பட்டது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றுவதாக அறிவித்தார்.

அமலுக்கு வந்தது
இந்த நிலையில் இன்று இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 'புதுமைப்பெண் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் இன்று சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடக்கும் விழாவில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூவாய் உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும்.

மெசேஜ் சென்றது
நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். இதையடுத்து தமிழ்நாடு முழுக்க இன்று ஒரே நாளில் 1 லட்சம் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் தொடர்பாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பெயரில் அனுப்பப்பட்டுள்ள இந்த மெசேஜில், நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை கொண்ட சிங்கப் பெண்களே! கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிடத் துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன். தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தில் இணைந்திடும் உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்! மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர், என்று மெசேஜ் சென்றுள்ளது.

1 லட்சம் பேர்
இந்த திட்டத்திற்காக ரூ.698 கோடி வருடத்திற்கு செலவு செய்யப்படும். 1 லட்சம் மாணவிகள் முதல் கட்டமாக இந்த திட்டத்திற்கு தேர்வாகி உள்ளனர். அவர்களுக்கு இன்றில் இருந்து பணம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன்பின் இந்த திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்படும். இதற்காக . https://penkalvi.tn .gov.in என்ற இணைய பக்கமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications