தேனாம்பேட்டையில் ஆச்சரியம்.. சென்னையின் "இதய" பகுதிக்கு கிடைக்கும் வரப்பிரசாதம்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பினை தெரிவித்து, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.. இது சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
மார்ச் மாதம் நடந்து முடிந்த 2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்திருந்தார்.
பட்ஜெட் அறிவிப்பு: அந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் வெளியாகி இருந்தன.. குறிப்பாக, சாலைப்போக்குவரத்து குறித்து பட்ஜெட்டில் வெளியாகி இருந்த தகவல் இதுதான்:

"பொருளாதார வளர்ச்சியை பெருக்க, சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்கின்றது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1,407 கோடி செலவில் 148 கி.மீ. சாலைகளை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளும், 524 கி.மீ. சாலைகளை ரூ. 803 கோடி மதிப்பில் இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கட்டப்படும் மேம்பாலம்: வரும் ஆண்டில் ரூ.621 கோடி மதிப்பீட்டில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம் கட்டப்படும். பன்னாட்டுப் பொறியியல் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்று சென்னை மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைகளுக்கு மேல் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும். இந்த பணிகள் நிறைவுற்றவுடன், பல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து சாலைப் பாதுகாப்பும் மேம்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பைதான், முதல்வர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ளார்.. சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான, அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது..
சென்னைவாசிகள்: இந்த அறிவிப்பானது சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. காரணம், சென்னையில் உள்ள முக்கிய வழித்தடங்களில் முதன்மையானது இந்த அண்ணா சாலை... கிண்டியில் தொடங்கி புனித ஜார்ஜ் கோட்டை வரை 15 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. ஏராளமான அரசு அலுவலகங்கள், வணிக நிறுவன கட்டிடங்கள் இந்த சாலையில் அமைந்துள்ளதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
பல்லவன் சாலை, மேற்கு கூவம் நதி சாலை, சுவாமி சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, பிளாக்கர்ஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை, பின்னி சாலை, ஸ்பென்சர் பிளாசா, ஒயிட்ஸ் சாலை, கிரீம்ஸ் சாலை, லாயிட்ஸ் சாலை, நுங்கம்பாக்கம் சாலை, கதீட்ரல் சாலை, விஜயராகவா சாலை, தியாகராயா சாலை, எல்டாம்ஸ் சாலை, வெங்கட் நாராயணா சாலை, சேமியர்ஸ் சாலை, தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர் தாலுகா அலுவலக சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, சர்தார் படேல் சாலை, கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் அண்ணா சாலையில் சந்திக்கின்றன.
எகிறும் எதிர்பார்ப்பு: இதனால் தினசரி காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இப்படிப்பட்ட சூழலில், இந்த சாலையில் புதிய மேம்பாலம் அமைய உள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன், தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும் என்றும் நம்பப்படுகிறது.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
ரூ.354 கோடி சிங்கப்பெண் திட்டம் யாருக்காக? ரோந்து எங்கே? தமிழகத்தை உலுக்கிய 11 சிறுமிகள்.. அக்கிரமம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications