ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்
சென்னை: தமிழக அரசியல் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது.. ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முந்தைய தேர்தல்களை விட இந்த முறை பெரும் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) உத்தேச பட்டியல் தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. தமிழகத்தில் அடுத்த
என்டிஏ கூட்டணிக்குள் புகைச்சல் அதிகரித்து வருவதாக தெரிகறது.. டெல்லி தரப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கப்பட்ட நிபந்தனைகள் மிகவும் அழுத்தமானவை என்றும் கூறப்படுகிறது..

என்டிஏ உத்தேச பட்டியல்
இப்படிப்பட்ட சூழலில்தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது.. இந்த உத்தேசப் பட்டியலின்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 165 அதிமுக களமிறங்க உள்ளதாக தெரிகிறது.. இது கூட்டணியில் அதன் முதன்மை நிலையை உறுதிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது..
பாஜக 31 தொகுதிகளிலும், அமமுக 9, தமாகா 4 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த உத்தேச பட்டியலில் தகவல் வெளியாகி உள்ளது. பாமக 17 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்திலும், அமமுக குக்கர் சின்னத்திலும், தமாகா தனிச்சின்னத்திலும் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜக, அமமுக,
இதனை தவிர புதிய நீதிக்கட்சி 2, ஐஜேகே 2, பார்பர்டு பிளாக் 1, பெருந்தலைவர் மக்கள் கட்சி 1, தமமுக 2, புதிய தமிழகம் 2 தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும் அந்த உத்தேச பட்டியலில் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நகர்ப்புற மற்றும் அரைநகர்ப்புற பகுதிகளில் அதிக கவனம் செலுத்தும் வகையில் இந்த உத்தேச சீட் ஒதுக்கீடு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.. வன்னியர் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் பாமக வலுவாக செயல்படும் வகையில் இந்த ஒதுக்கீடு இருக்கலாம் என அரசியல் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன..
டிடிவி தினகரனுக்கு 9 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என்பதால், கூட்டணிக்குள் பல்வேறு வாக்கு வங்கிகளை ஒருங்கிணைக்க முயற்சி நடைபெறுகிறது.. இதன் மூலம் அனைத்து கூட்டணி கட்சிகளையும் சமநிலைப்படுத்தும் முயற்சி தென்படுகிறது..
165 சீட் அதிமுக
இந்த உத்தேசப் பட்டியலை ஏற்கும் பட்சத்தில், அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.. எப்படியும் இந்த முறை 170 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ள அதிமுக, 165 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட உள்ளதாக கூறப்படுவது தொண்டர்களிடம் அதிர்ச்சியை உண்டாக்கி வருகீறது..
இந்த உத்தேசப் பட்டியல் வெறும் எண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; இது ஒரு நுணுக்கமான அரசியல் கணக்கீடு.. வன்னியர் வாக்கு வங்கியை நம்பியுள்ள பாமக-வுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் வட தமிழகத்திலும், தேவர் சமூக வாக்குகளை இலக்கு வைக்கும் அமமுக-வின் இடங்கள் தென் தமிழகத்திலும் கூட்டணியை வலுப்படுத்தும் என டெல்லி நம்புகிறது போலும்..
பாஜக கணக்கு
அதேபோல், நகர்ப்புறங்களில் பாஜக கவனம் செலுத்துவதன் மூலம் ஒரு புதிய வாக்கு வங்கியை உருவாக்க முடியும் என்பது அவர்களின் திட்டம்.. ஆனால், இத்தனை கட்சிகளையும் அரவணைத்துக்கொண்டு, அதிமுக தனது முதன்மை நிலையை எப்படிக் தக்கவைக்கப்போகிறது என்பதுதான் தற்போதைய சஸ்பென்ஸ்..
மொத்தத்தில், இந்த உத்தேசப் பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், திரைமறைவில் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகள் தமிழகத் தேர்தல் களம் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்வதையே உறுதி செய்கின்றன..
இது ஒரு உத்தேச பட்டியல் என்றாலும், அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் டெல்லியில் இன்று அமித்ஷா தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.. இதில் மேலும் சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. அதற்கு பிறகே அதிகாரப்பூர்வமான இறுதிப் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது..!!
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications