Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆபாச வலை, ஆடியோ லீக்".. பறந்து வந்த உத்தரவு.. அவசர அவசரமாக கூடிய கூட்டம்.. என்ன நடக்கிறது பாஜகவில்?

கமலாலயத்தில் நடந்த பாஜக மையக்குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடந்துள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவில் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ள நிலையில், நேற்றைய தினம் பாஜகவின் மையக்குழு கூட்டம் கமலாலயத்தில் நடந்துள்ளது.. இதுகுறித்த சில தகவல்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.

பாஜகவில் திருச்சி சூர்யாவும், டெய்சி பேசிய ஆபாச ஆடியோ வெளியாகி சர்ச்சையானது.. அதில் கட்சியின் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் குறித்தும் ஆபாச குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது.

அது குறித்து விசாரித்த பிறகு பாஜக விசாரணைக்குழுவின் பரிந்துரையின்படி சூர்யா பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் டெய்சி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் திருச்சி சூர்யா, கட்சியில் இருந்து வெளியேறினார்.

 பாய்ச்சல்

பாய்ச்சல்

தன்னை திட்டமிட்டு பேச வைத்து சிக்க வைத்து விட்டதாகவும், இதற்கு பின்னால் அமர்பிரசாத் என்ற நிர்வாகி இருப்பதாகவும், அவர் அண்ணாமலையின் வலதுகரமாக இருந்தவர் என்றும் சூர்யா குற்றம்சாட்டியிருந்தார்.. இந்நிலையில் கடந்த வாரம், சென்னை கமலாலயத்தில் நிர்வாகிகளை சந்தித்து அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.. மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அண்ணாமலை அவர்களிடம், பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் என்பது உட்பட கட்சியில் இருந்து சிலர் நீக்கப்பட்டது தொடர்பாகவும் சில அறிவுறுத்தல்களை தந்துள்ளார்.

 போய்ட்டே இருங்க

போய்ட்டே இருங்க

"யாராவது கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினாலோ, ஒழுங்கீனமான நடவடிக்கையில் ஈடுபட்டாலோ, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், கட்சிக்கு உழைக்க தயாராக இல்லாதவர்கள் தயவுசெய்து தானாகவே வெளியேறி விடுங்கள்.. இங்கே யாரையும் பிடித்து வைத்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது" என்று கண்டிப்புடன் அண்ணாமலை அக்கூட்டத்தில் பேசியுள்ளதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், இதற்கு முன்பு பெற்ற சீட்டைவிட அதிகமாக கேட்டு பெற வேண்டும்.. அதேசமயம், அதிமுக கூட்டணியை முழுமையாக நம்பிவிட முடியாது.. நாம் தனித்து களமிறங்கவும் தயாராக இருக்க வேண்டும்" என்றும் அட்வைஸ்களை மாநில தலைவர் வழங்கியிருக்கிறார்.

 டேமேஜ் ஸ்டேஜ்

டேமேஜ் ஸ்டேஜ்

காரணம், தமிழக பாஜகவில் நிலவும் குழப்பங்கள், சர்ச்சைகள் குறித்த செய்திகள் அனைத்தும், மேலிட தலைவர்களுக்கு விஷயம் பறந்து வருகிறது.. நாடாளுமன்ற தேர்தல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றபோது, இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். அப்போதே, தமிழக பாஜகவில் நடந்துவரும் விஷயங்கள் தொடர்பாக அண்ணாமலையை, மேலிட தலைவர்கள் மேலிடம் கடிந்து கொண்டதாக செய்திகள் வந்தன..

சமிக்ஞைகள்

சமிக்ஞைகள்

அதாவது, சீனியர்களை அண்ணாமலை மதிப்பதில்லை, தன்னை எதிர்ப்பவர்களை ஆபாச வலையில் விழ வைத்து வீடியோ, ஆடியோ எடுத்து வெளியிடுவது என்பது போன்ற சில குற்றச்சாட்டுகள் வந்திருந்த நிலையில், அதுகுறித்து மேலிடம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது.. அதைத் தொடர்ந்துதான் நேற்றைய ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது, மூத்த தலைவர்களை அனுசரித்து செல்லும்படி அண்ணாமலைக்கு ஆலோசனை வழங்கப்பட்டதுடன், தேர்தலுக்கு தயாராக இருக்கும்படியும் அதற்கான வேலைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அதுவரை தேவையில்லாத பிரச்னைகளில் தலையிட வேண்டாம் என்றும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+