Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மிஞ்சிட்டாரே" எடப்பாடி.. அங்கயும் "கை" வைத்து.. சீமானே எதிர்பாக்கல.. அமமுக மிரள, பாஜக அதிர.. ஓ காட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீமானுக்கு மிகப்பெரிய ஷாக் தந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. ஏற்கனவே அமமுகவின் டிடிவி தினகரன் அதிர்ச்சியில் உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிகிறது.

தமிழ் தேசியத்தை முன்வைப்பது ஒருபக்கம், திராவிட அரசியல் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைப்பது மறுபக்கம் என இரு துருவங்களில் சீமானின் அரசியல் விடாமல் பயணப்பட்டு வருகிறது.

மற்றொருபுறம் திமுக மற்றும் அதிமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை சீமான் தன் பக்கம் திருப்பி வருகிறார்.. திமுகவுக்கு எதிரான ஓட்டுக்களை பெறுவதில் எப்போதுமே, அதிமுகவைவிட நாம் தமிழர் கட்சி முனைப்பு காட்டும்.

மேனகா

மேனகா

இது அதிமுகவுக்கு எரிச்சலை தந்தாலும், சீமான் களத்தில் இருப்பது திமுகவுக்கு ஒருவித நிம்மதியை தந்து வருகிறது.. காரணம், எதிர்ப்பு ஓட்டுக்கள் அதிமுகவுக்கு மட்டுமே முழுமையாக சென்றுவிடாது என்பதால்தான்.. அந்தவகையில், ஈரோடு கிழக்கிலும் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை யார் அள்ளுவது என்பதுடன், சிறுபான்மையினர் ஓட்டுக்களையும் யார் அதிகமாக பெறுவது என்ற போட்டி அதிமுக - நாம் தமிழர் இடையே எழுந்தது.. எப்போதுமே சாதி அரசியலுக்கு முக்கியத்துவம் தராத சீமான், இந்த முறை, சாதி ஓட்டுக்களை கணக்கு செய்து, வேட்பாளர் மேனகாவை அறிவித்ததை பலரும் கவனிக்காமல் இல்லை..

 பல்ப் எரியுதா

பல்ப் எரியுதா

மேலும், தன்னுடைய பிரச்சாரத்தில் சிறுபான்மையினர் ஓட்டுக்களை குறி வைத்தே அதிகமாக பேசியிருந்ததும் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது. அத்துடன் சீமானின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும், பாஜகவைவிட, திமுகவைவிட, அதிமுகவுக்குதான் ஈரோடு கிழக்கில் கலக்கத்தை தந்தது.. இதனால் சிறுபான்மையினர் வாக்குகளை பெற போவது சீமானா? எடப்பாடியா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பெற போவது சீமானா? எடப்பாடியா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.. இறுதியில் தேர்தல் ரிசல்ட் வெளியானதில், 40 ஆயிரம் ஓட்டுக்கள் அதிமுகவுக்கும், 10,627 வாக்குகள் நாம் தமிழருக்கும் கிடைத்தது..

 பிரபலங்கள்

பிரபலங்கள்

இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஒன்றில் கூட டெபாசிட் வாங்காததால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் 60
நாம் தமிழர் கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கோ.பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளார்... இவர் 2016 மற்றும் 2021-ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் மொடக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இவரை தவிர, அக்கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தமிழன்பன் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

 பெரிய குறி

பெரிய குறி

நாம் தமிழர் கட்சிக்குள் பெரிதாக உட்கட்சி பூசல் நிலவியது இல்லை.. சில வருடங்களுக்கு முன்பு ராஜீவ்காந்தி, கல்யாணசுந்தரம் போன்ற முக்கிய புள்ளிகள் அதிருப்தியால் விலகி, திமுக, அதிமுகவில் இணைந்த நிலையில், அதற்கு பிறகு அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகவில்லை.. இப்போது திடீரென, நாம் தமிழர் கூடாரம் மீதும் எடப்பாடியின் குறி விழுந்துள்ளது கவனத்தை பெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி மாவட்ட செயலாளராக இருந்த கோ .பிரகாஷ் என்பவர்தான், அதிமுகவில் இணைந்துள்ளார்.. தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் பெறுவதற்கு முக்கிய பங்காற்றியவர் இந்த பிரகாஷ்தான்..

 தட்டி தூக்கியாச்சு

தட்டி தூக்கியாச்சு

ஆனால், கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கோ.பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளார்... இவர் 2016 மற்றும் 2021-ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் மொடக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார் பிரகாஷ். இவரை தவிர, அக்கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தமிழன்பன், மொடக்குறிச்சி ஒன்றியப் பொறுப்பாளர் மயில்சாமி, அரச்சலூர் பேரூராட்சி செயலாளர் சிவானந்தன், தொகுதி இளைஞர் பாசறையைச் சேர்ந்த தங்கராசு, அமமுக ஈரோடு மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் துரை. நல்லசாமி போன்றோரும் எடப்பாடி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர்.

 சரவெடி செந்தில்

சரவெடி செந்தில்

எடப்பாடி பழனிசாமியை, அதிமுகவின் கோட்டையாக கொங்குவை தொடர்ந்து தக்கவைக்கவும் முயன்றுவருகிறார்.. ஆனால், திமுகவின் அசுர வேகத்திற்கு எடப்பாடியால் ஈடுகொடுக்க முடியாமல் திணறும் சூழலும் உருவாகி உள்ளது. அதிலும் செந்தில்பாலாஜியின் அரசியல் வியூகத்தை சமாளிக்க முடியாமல், அதிமுக கலக்கமாகி வருவதாகவும் சொல்கிறார்கள்.. எம்பி தேர்தல் விரைவில் வரஉள்ளநிலையில், கொங்கு தன் கையை விட்டு போய்விடக்கூடாது என்பதற்காகவே, அதிருப்தியாளர்களை அதிமுகவில் இணைக்க, எடப்பாடி தரப்பு தீவிரமாகி கொண்டிருக்கிறதாம்.. அந்த அடிப்படையில்தான் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் இணைப்பும் பார்க்கப்படுகிறது.. ஒவ்வொரு கட்சியின் கூடாரத்திலும் எடப்பாடி கை வைத்து வருவதால், தமிழக கட்சிக்குள்ளும் லேசான நடுக்கம் பற்றிக் கொண்டுள்ளாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+