பிக் பாஸ் 3: பர்ஸ்ட் சீசன்ல ஆரவ்.. 2வதுல மஹத்.. இந்த தடவை ‘ல்தகாசைஆ’ ஆடு இந்த இளம் நடிகர் தானா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் தர்ஷன் கலந்து கொள்வது தெரிய வந்துள்ளது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் தர்ஷன் கலந்து கொண்டுள்ளது உறுதியாகியுள்ளது.
விஜய் டிவியில் இன்று இரவு முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் படப்பிடிப்பு நேற்றே பதிவு செய்யப்பட்டு விட்டது. நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, நடிகை வனிதா விஜயகுமார், காமெடி நடிகை மதுமிதா, நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா, நடிகைகள் பாத்திமா பாபு ஆகியோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
இவர்கள் தவிர, அஜித் நடிப்பில் விரைவில் ரிலீசாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள அபிராமி வெங்கடாசலமும் ஒரு போட்டியாளராக பங்கேற்பதாகக் கூறப்படுகிறது.

இளம் நடிகர் தர்ஷன்:
இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளராக இலங்கை மாடலும், தமிழ் சினிமாவின் இளம் நடிகருமான தர்ஷன் சாந்த்தும் கலந்து கொண்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இவர் தமிழில் வேறென்ன வேண்டும் என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு மிஸ்டர்.இலங்கையாக தேர்வு செய்யப்பட்டவர்.

ல்தகாசைஆ பிளான்:
இதுவரை நமக்குக் கிடைத்த தகவல்களின் படி, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் இளம் வயதுடையவர் தர்ஷன் தான். பார்ப்பதற்கு அதர்வா போன்று அழகாக தோற்றமளிக்கிறார். நிச்சயம் இவரை வைத்து பிக் பாஸ் ஏதாவது ‘ல்தகாசைஆ' பிளான் வைத்திருப்பார் என எதிர்பார்க்கலாம்.

ஆரவ், மஹத்:
ஏனெனில் முதல் சீசனில் இளம் நடிகரான ஆரவ் தான், ஓவியாவுடன் காதல் என்ற சர்ச்சையில் சிக்கினார். அதேபோல், கடந்த சீசனில் இளம் நடிகரான மஹத்தும், யாஷிகாவுடன் காதல் என்ற பிரச்சினையில் சிக்கி, அதனால் அவரது நிஜக் காதல் முடிவுக்கு வரும் நிலைக்கு சென்றது நாம் அனைவரும் அறிந்த கதை தான்.

பிக் பாஸ் பிளான்:
இந்த சூழ்நிலையில் தான் இம்முறை இளம் நடிகரான தர்ஷன் போட்டியாளராகி இருக்கிறார். கடந்த சீசன்களை வைத்து பார்க்கும் போது, நிச்சயம் இவர் துறுதுறு இளைஞராக, வீட்டில் அனைவரையும் கவரும் போட்டியாளராக வலம் வருவார் எனத் தெரிகிறது. அதனால் நிச்சயம் மக்கள் இவர் மீது தனிக் கண் வைத்திருப்பார்கள். பார்ப்போம் இம்முறை பிக் பாஸ் என்ன பிளான் வைத்திருக்கிறார் என்று.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications