Bigg boss 3 tamil: மாறிய பிக் பாஸ்.. மாற்றியது யாரோ...?
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் ஹிட் என்று சொன்னாலும், மற்ற சேனல்களின் ரேட்டிங்கை இது எந்த விதத்திலும் குறைத்து விடவில்லை. எப்போதும் போல, சன் டிவி, ஜீ தமிழ் வியூவர்ஸ் அந்த சேனல்களை மட்டும்தான் பார்த்து வருகின்றனர்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, முதலிரண்டு சீசன்களில் களைக் கட்டியது போல மூன்றாவது சீசனில் களைக் கட்டவில்லை. இதில் கமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்..
நம்மவர் தாமரை இலை தண்ணீர் போல நிகழ்ச்சியோடு ஒட்டியும் ஒட்டாமல் இருக்கிறார். முதல் மாதிரி, உடை விஷயத்தில் அதிக கவனம் இல்லை.ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக கொஞ்சம் பேசுகிறார்.

பிக் பாஸ் ஸ்ட்ரிக்ட்
முதல் இரண்டு சீசன்களில் பிக் பாஸ் தேவை இல்லாமல் பேச மாட்டார். முதல் சீசன் ஹவுஸ் மேட் ஓவியா மன அழுத்தத்தில் இருந்தபோது கூட, அத்தனை ஜாலியாக பேசவில்லை. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குன்னு சொல்லி, அழுதபோது கூட, பிக் பாஸிடம் இருந்து வந்தது மவுனம்தான்.

குருநாதர் பிக் பாஸ்
இப்போது மூன்றாவது சீசன் ஹவுஸ் மேட்ஸுக்கு குருநாதர் ஆகி இருக்கிறார் பிக் பாஸ்.தனது ஸ்டிரிக்ட் பேச்சுக்களை குறைத்துக் கொண்டு, ஷெரீன் நீங்க அழகா இருக்கீங்க என்று கூறுவது, சாண்டி அண்ட் கோவை சிஷ்யா என்று கூப்பிடுவது, லாஸ்லியா என்னைப் பிடிக்குமா என்று கேட்டபோது பிடிக்கும் என்று சொல்லியது என்று ஜாலி மூடில் இருக்கிறார்.

சிஷ்யா அழைப்பு
தர்ஷன் வெளியேறுவதற்கு முன்பு, குருநாதா சிஷ்யா என்று ஒருமுறை கூப்பிடுங்கள் என்றபோது, அடுத்த சில நொடிகளில் சிஷ்யா என்றும் அழைத்துவிட்டார். இப்படி தனது ஸ்ட்ரிக்ட் ரூல்ஸை மாற்றிக்கொண்டு உள்ளார் பிக் பாஸ்.

சாக்லேட் பவுடர்
முதல் சீசனில் ஹவுஸ் மேடாக இருந்த காயத்ரி ரகுராம், ஒரு கால்ஷியம் கலந்த சாக்லேட் பவுடர் கேட்டதற்கு குறும் படம் போடும் அளவுக்கு போனது நிகழ்ச்சி. இப்போது கோழிக்கறி என்ன,பரோட்டா என்ன,பிரியாணி என்ன என்று கலக்குகிறார்கள். இந்த அளவுக்கு பிக் பாஸ் மாற்றம் நிகழ்ந்தது எப்படி, இதை மாற்றியது யார்?
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications