"வாயில் விரலை வச்சு".. என்ன இப்படி பச்சையா பேசுறார்.. வந்த முதல்நாளே எரிச்சலை கிளப்பிய அர்ச்சனா
அர்ச்சனா கலாய்ப்பது சில நேரத்தில் எரிச்சலை தருவதாக உள்ளது
சென்னை: வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளே "சிம்ப்ளி வேஸ்ட் பீஸ்" என்ற பட்டத்தை அர்ச்சனாவுக்கு தந்து வருகிறார்கள் பிக்பாஸ் ஃபேன்ஸ்!
நேற்று முதல்நாள் போட்டியாளராக விஜே அர்ச்சான வீட்டுக்குள் நுழைந்தார்.. அவரது வருகையே அமர்க்களப்பட்டது.. டான்ஸ் ஆடிக் கொண்டே உள்ளே வந்தவர், எல்லாரிடமும் கலகலப்பாக பேசினார்.
பெரும்பாலும் டிவி பிரபலங்கள் அவருக்கு ஏற்கனவே நண்பர்கள் என்பதால், பழகுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.. எல்லாவற்றிற்கும் மேலாக அர்ச்சனாவே நன்றாக பேசக்கூடியவர்தான்.. ஆனால், இதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிடும் போல இருக்கிறது!

டாஸ்க்
தன் பாணியில் அனைவரையும் கலாய்த்தார் அர்ச்சனா... பிறகு பிக்பாஸ் உங்கள் டாஸ்க்கை செய்யுங்கள் என்று சொல்லவும், அர்ச்சனா ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு பட்டம் கொடுக்கிறார். பெரும்பாலும் அனைத்துமே பொருத்தமான பட்டங்கள்தான் தரப்பட்டன என்றாலும், அர்ச்சனா சளசளவென பேசியதாகவே தெரிந்தது. முதல்நாளிலேயே ஓவர் வாய்... செம அறுவை.. என்ற முணுமுணுப்புகள் எழுந்து வருகின்றன.

சுரேஷ்
நேற்று முழுவதும் அர்ச்சனாவை பார்ப்பதற்கு, ஜீ தமிழில் நிகழ்ச்சி செய்கிறவர் போலவே தென்பட்டது.. இதேபோல, வளவளவென பேசிக் கொண்டிருந்தால், அர்ச்சனா மீது அலுப்புதான் கூடும் என்கிறார்கள் ரசிகர்கள். அதுமட்டுமல்ல, சுரேஷை குறி வைத்தே உள்ளே வந்தவர் போல தெரிகிறது. சுரேஷ் சக்கரவர்த்தி பற்றி மற்ற போட்டியாளர்களிடம் நக்கலாக பேசி அவரை கடுப்பேத்துகிறார்.

ரம்யா பாண்டியன்
அதனால் இனியும் மொக்கை கவுண்ட்டர்களை தந்து சுரேஷூக்கே டஃப் கொடுக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. உள்ளே நுழைந்து அர்ச்சனாவின் கட்டிப்பிடி வைத்தியம் கொஞ்சம் நெருடலாக தென்பட்டது.. பிறகு ரம்யா பாண்டியனிடம் "விரலை வாயில வச்சு சப்பிட்டிருந்தியான்னு"ன்னு கேட்டது அதைவிட சற்று அதிர்ச்சியாகவும் இருந்தது.

எதிர்பார்ப்பு
முதல்நாள் வெளியான புரொமோவில் "எவன் அவன்" என்று அர்ச்சனா கேட்டபோதே, மரியாதைக்குறைவாக இவர் யாரை பேசுகிறார் என்று யோசிக்க வைத்தது. பிறகுதான் சம்பந்தமில்லாதவரை பற்றி அவர் பேசுகிறார் என்று தெரிந்தது. எனினும், அர்ச்சனா உண்மையிலேயே யாரையுமே எடுத்தெறிந்து பேச்கூடியவரா அல்லது அனுசரித்து போகக்கூடியவரா என்பது இனிமேல்தான் போக போக தெரியவரும்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications