விஜயை வறுத்தெடுக்கப் போகும் வீரத் தமிழச்சி.. திமுக மேடைகளில் ‘பிக் பாஸ்’ ஜூலி! திமுகவின் பலே ப்ளான்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சங்கீதா விவாகரத்து விவகாரம் பொதுவெளியில் பேசப்பட்டு வரும் நிலையில் விஜய் மீதான விமர்சனங்கள் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் தன்னை திட்டுவதாக கூறி வீடியோ வெளியிட்டு வந்த பிக் பாஸ் பிரபலமான ஜூலி திமுக மேடைகளில் பங்கேற்க தொடங்கி இருக்கிறார். வரும் நாட்களில் மேலும் பல நிகழ்ச்சிகளில் ஜூலியை வைத்து நடத்த திமுக புள்ளிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக புதிய அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் களம் இறங்கியுள்ள நடிகர் விஜய் மீது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
சமீப காலமாக விஜய்க்கு எதிராக பல்வேறு தரப்புகளில் இருந்து கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு நடுவில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவகாரங்களும் சமூக வலைதளங்களில் பேசப்படத் தொடங்கியதால், அவரைச் சுற்றிய அரசியல் சூழல் மேலும் பரபரப்பாகியுள்ளது.

விஜய் அரசியல் சர்ச்சை
குறிப்பாக சங்கீதா விவாகரத்து தொடர்பான செய்திகள் பொதுவெளியில் பேசப்பட்டு வரும் நிலையில், விஜயை குறிவைத்து சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.. கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் விஜயை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வரும் ஜூலி தற்போது திமுக மேடைகளில் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம்
சில நாட்களுக்கு முன்பு வேலூர் நகரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், தனது பேச்சின் போது ஜல்லிக்கட்டு காளையை சமாதானப்படுத்திய சிறுவனை பற்றி ஒரு கதை போல கூறியிருந்தார். அந்தக் கதையில், ஒரு சிறுவன் காளைக்கு புல்லுக்கட்டு கொடுத்து அதை சமாதானப்படுத்தியதாக அவர் எடுத்துக்காட்டாக கூறினார். இந்த பேச்சை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில் ஜூலி கடுமையாக விமர்சனம் செய்தார்.
பிக் பாஸ் ஜூலி
"இந்தப் பேச்சில் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் காளை கதை சொல்லிவிட்டீர்கள். அதை கேட்டு உங்கள் கட்சியில் இருக்கும் இளைஞர்கள் அல்லது மைனர்கள் காளை அருகே புல்லுக்கட்டு கொண்டு சென்றால் ஏதாவது விபத்து நடந்தால் என்ன செய்வது?" என கேள்வி எழுப்பினார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழர்கள் கடுமையாக போராடி சாதித்ததை நினைவுபடுத்திய அவர், இவ்வாறான கருத்துகள் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கக் கூடும் என்றும் தெரிவித்தார்.
விஜய் ரசிகர்கள்
இந்த வீடியோ வெளியானதும், சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்வினை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிலர் ஜூலியை திட்டியும் மிரட்டியும் வருவதாக அவர் கூறி, பின்னர் இன்னொரு வீடியோவையும் வெளியிட்டார். அந்த வீடியோவில் "உங்களுக்கு என்னை பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் நான் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருப்பேன். நீங்கள் தான் பனையூரை விட்டு வெளியே வர மாட்டீர்களே; வேண்டுமானால் நான் வருகிறேன்" என்று சவால் விடுக்கும் வகையில் பேசினார்.
திமுக அரசியல் திட்டம்
இதையடுத்து சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் மற்றும் ஜூலி இடையே வார்த்தைப் போராட்டம் மேலும் தீவிரமானது. சில ரசிகர்கள் ஜூலி மீது தனிப்பட்ட விமர்சனங்களையும் முன்வைத்தனர். இதனால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சமீப காலமாக ஜூலி சில திமுக தொடர்புடைய மேடைகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில் திமுக சார்பில் நடைபெறும் அரசியல் நிகழ்ச்சிகளிலும் அவரை பங்கேற்கச் செய்யும் திட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திமுகவிம் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்சியிலும் ஜூலி கலந்து கொண்டு பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications