ஒரு "சின்னப்பொண்ண" வச்சிருக்கான்.. சிரிப்பலையில் பிக்பாஸ்.. திருதிருவென விழித்த ராஜு
சென்னை: பிக்பாஸ் வீட்டில் விஜயதசமியை முன்னிட்டு, போடப்பட்ட நாடகத்தின் ஒரு பகுதியாக ஜோக்கர் கதாபாத்திரமாக நடித்த ராஜு, சின்னப்பொண்ணை வச்சிருக்கான் என சொல்லியபோது பிக்பாஸ் வீட்டில் நாட்டுப்புறக் கலைஞர் சின்னப்பொண்ணுவை பார்த்து அனைவரும் சிரித்தேவிட்டனர். அவரும் ராஜூவின் டங் ஸ்லிப்பானதை பார்த்து சிரித்தார்.
பிக்பாஸ் வீட்டில் நேற்று 12 ஆம் நாள் விஜயதசமியை முன்னிட்டு நாடகம் அரங்கேறியது. இதில் சிவபெருமானாக நிரூப், பார்வதியாக இசைவாணி, அகிலாண்ட ஈஸ்வரியாக தாமரைச் செல்வி, அவரது தாயாக சின்னப்பொண்ணு, கணவன் மனைவியாக வருண்- நாடியா சாங், ஜோக்கராக ராஜு, பூசாரியாக இமான் அண்ணாச்சி அவரது சிஷ்யைகளாக சுருதி, ஐக்கி, பிரம்மனாக அபினய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
முத்தாலம்மனும் முப்பெருந்தேவியும் என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. பெண் இனத்தை இழிவாக பேசி,பெண் இனத்தை அழிக்க நினைக்கும் வெல்லுடையான் என்பவனை அழிக்கும் அவதாரமாக தாமரைச்செல்வி மறுபிறவி எடுத்து பிறக்கும்படியாக நாடகம் நகர்கிறது. தாய் சின்னப்பொண்ணுவுக்கு தெரியாமல் 15 வயதான தாமரை எங்கோ விளையாடி விட்டு வருகிறார்.

கோபித்துக் கொண்ட தாமரை
அப்போது தாய் சின்னப்பொண்ணு கோபித்துக் கொண்டு தாமரையை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். இதனால் தாமரை அம்மாவை நினைத்து அழுகிறார். அப்போது வருண் தனது மனைவி நாடியாவிடம் நூல் வாங்கிவிட்டு வருவதாக செல்கிறார். வரும் வழியில் தங்கையாக நினைக்கும் தாமரையை பார்த்து என்னாச்சு ஏன் அழுகிறாய்? என கேட்கிறார்.

தாமரை திட்டியது
அதற்கு தாமரை தனது தாய் திட்டியதை சொல்கிறாள். எனவே தன்னையும் வருண் வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கேட்கிறாள். பொண்டாட்டிக்கு பயந்த சுபாவம் கொண்ட வருண் முதலில் மறுக்கிறார், பின்னர் தாமரை செத்துவிடுவதாக சொன்னதும் சரி என்கிறார். அப்போது நாடியாவிடம் ராஜு கலகம் செய்கிறார்.
Recommended Video

கல்யாணம்
நாடியாவிடம் "என்ன தலைநிறைய பூ இல்லாமல் இருக்கே . அதெல்லாம் இப்ப வாங்கித் தருவதில்லையா" என கேட்கிறார். அதற்கு நாடியா, ராஜுவிடம் "அதெல்லாம் கல்யாணத்தப்ப வாங்கிக் கொடுத்ததோட சரி" என்கிறார். அதற்கு ராஜு எப்படி வாங்கி தருவான், அவன்தான் காட்டுக்குள்ள ஒரு சின்னப்பொண்ணை (15 வயது தாமரை) வச்சிருக்கானே என்கிறார்.

போட்டியாளர்கள்
உடனே பிக்பாஸ் போட்டியாளர்கள் சிரித்து விடுகிறார். 15 வயது பெண்ணை சின்னப்பொண்ணு என குறிப்பிடும் போது அங்கிருந்த சக போட்டியாளர் சின்னப்பொண்ணுவை ராஜுவுக்கு நினைவுப்படுத்துகிறார்கள், உடனே ஆஹான்னு நினைத்துவிட்டு ஸ்மால் கேர்ள் என்கிறார், அதற்கும் போட்டியாளர்கள் கிண்டல் செய்யவே , சின்ன வயசு பொண்ணு என கூறுகிறார். இப்படி காமெடியாக நடந்து முடிந்தது இவர்களது நாடகம்! இந்த காமெடிக்கு சின்னப்பொண்ணும் சிரித்துவிட்டார்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications