பிக்பாஸ் சீசன் 5 யில் லொடலொட முதல் பின்டிராப் சைலன்ட் வரை.. இவர்கள்தான் போட்டியாளர்களா?
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 8 போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் உலா வருகின்றன.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே மிகவும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு தங்க வைக்கப்படுவர். இவர்கள் 15 பேரும் ஒவ்வொரு குணாதிசயங்களை கொண்டவர்களாக இருப்பர். சுருக்கமாக சொல்ல வேண்டுமானாலும் 5 விரல்களும் ஒன்று போல் இருக்கிறதா என கேட்பார்கள் அல்லவா, அந்த கான்செப்ட்தான்!

15 போட்டியாளர்கள்
5 விரல்களும் எப்படி ஒன்றாக இருக்காதோ, அது போல் இங்குள்ள 15 போட்டியாளர்களின் குணங்கள், எண்ணங்கள், செய்கைகள் ஒன்று போல் இருக்காது. இவற்றை சமாளித்து அந்த வீட்டில் மக்களின் ஆதரவை பெற்று கடைசி வரை யார் தங்குகிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள். வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசன் வருவார்.

அக்டோபர் 3
அவர் அந்த நிகழ்ச்சியில் முரண்டு பிடிப்போருக்கு அழகாக அறிவுறுத்துவதில் கமல்ஹாசன் வல்லவர். அதே சமயம் இந்த நிகழ்ச்சி மூலம் மறைமுகமாக அரசியலையும் பேசுவார். இதனால் பலர் வார இறுதி நாட்களில் நிகழ்ச்சியை தவறாமல் பார்க்கிறார்கள். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 வரும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

கிண்டி
இதற்காக போட்டியாளர்கள் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தற்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரின் பெயர்கள் இணையதளத்தில் உலா வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் அக்ஷரா ரெட்டி, நடிகை பவானி ரெட்டி, தொகுப்பாளினி பிரியங்கா, ஜாக்குலின், சுனிதா, சந்தோஷ் பிரதாப், கோபிநாத் ரவி, மிலா உள்ளிட்டோர்களின் பெயர்கள் உள்ளனர்.

டிஆர்பி ரேட்
ஜீ தமிழ் தொலைகாட்சியில் சர்வைவர் எனும் நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இந்த நிகழ்ச்சியை விட டிஆர்பி ரேட்டை அள்ளும் அளவுக்கு விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த அதற்கேற்ப போட்டியாளர்களை தேர்வு செய்யும் என பலர் கூறுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் மிலா கலந்து கொள்வது உறுதி என்றால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பட்டியல் எல்லாம் உத்தேசம்தான். உண்மை பட்டியலை காண வரும் அக்டோபர் 3 வரை பொறுத்திருப்போம்.












Click it and Unblock the Notifications