விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே இதுதான்.. இதை மட்டும் சமாளிக்கவில்லைன்னா.. மொத்தமா போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் - எடப்பாடி பழனிசாமியின் அதிமுக இடையே கூட்டணி அமைவதற்கான சூழல் அமைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய்க்கு பெரிய சவால் ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணி அமைக்கும் சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருகிறது. கரூர் விவகாரத்தில் விஜயை நேரடியாக கடுமையாக தாக்காமல் பாஜக மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் திமுக தரப்பையும் ஆளும் கட்சி என்பதால் பாஜக தாக்கி வருகிறது.

TVK Vijay

தமிழ்நாட்டில் தனது கால்தடத்தை வலுப்படுத்தும் நோக்கில், பாஜக அண்மையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன. கடைசியாக டெல்லியில் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. விரைவில் இடப்பங்கீடு தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அதிமுக - விஜய் கூட்டணி

இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜய் - அதிமுக இடையே கூட்டணி அமைவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

ஏற்கனவே எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த போன் காலில் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக வட்டாரம் நம்மிடம் பேசுகையில்.. கூட்டணிக்கு வருகிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். இதற்கு விஜய் நோ சொல்லவில்லை. நான் மக்களை சந்திக்க போகிறேன். மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க போகிறேன், என்று கூறியதாக தெரிவித்தனர்.

விஜய்க்கு பெரிய சவால்

இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய்க்கு பெரிய சவால் ஏற்பட்டு உள்ளது. விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் அதே கூட்டணியில் பாஜக உள்ளது விஜய்க்கு சிக்கலாக மாறி உள்ளது.

1. பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் கூறி வருகிறார். அவர்களுடன் முதல் தேர்தலே கூட்டணி வைத்தால் விஜய் அரசியல் முடிவிற்கு வரும்.

2. பாஜகவின் மத ரீதியிலான அரசியல் விஜய் முன்னெடுக்கும் சமூக நீதி அரசியலுக்கு பெரிய சிக்கலாகும்.

3. விஜய் தலித், கிறிஸ்துவர்கள் வாக்குகள் குறி வைக்கிறார். ஆனால் அவர் பாஜக உள்ள கூட்டணிக்கு சென்றால் அது விஜய்க்கு சிக்கலாகும்.

4. விஜய் அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால்.. பாஜக கூட்டணியை முறித்துவிட்டு வாருங்கள் என்று எடப்பாடியிடம் கூற வேண்டும்.

5. இதை எடப்பாடி ஏற்பாரா.. டெல்லி பாஜக அனுமதிக்குமா? என்ற கேள்வி உள்ளது. விஜய்க்கு இருக்கும் பெரிய சவாலே இதுதான். விஜய் இதை எப்படி சமாளிப்பார்.. என்ன மாதிரியான முடிவுகளை இதில் எடுப்பார் என்ற பெரிய கேள்வி நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+