வீட்டிலிரு: விழித்திரு: பிகில் பாரு.. டிஆர்பி மன்னன் விஜய்.. பிகிலுக்காக தெறி போஸ்டர்..பேன்ஸ் அதகளம்
சென்னை: நடிகர் விஜயின் பிகில் படம் சன் டிவியில் ஒளிபரப்பாவதை அவரின் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுகிறார்கள்.
பிகில் படம் கடந்த வருடம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக பெரிய சாதனையை படைத்தது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமாக பிகில் வெளியானது.
இந்த படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது. நாளை மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது

படம் எப்படி
இதற்காக விஜய் ரசிகர்கள் வித விதமாக போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். ஒரு போஸ்டரில் தமிழகத்தின் தலைவரே,வருங்கால முதல்வரே, எங்கள் தளபதியே, நடிகர் விஜயின் பைக்கில் வரும் ஞாயிறுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. எல்லோரும் இதை தவறாமல் பார்க்கக் வேண்டும். டிஆர்பியை உயர்த்துவோம், டிஆர்பி மன்னன் விஜய் என்று உரக்க சொல்வோம்.

என்ன போஸ்டர்
வீட்டில் இரு விழித்து இரு, பிகில் பாரு என்று திருச்சியில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் கொரோனாவால் மக்களின் நிலையோ திகில், அதை மாற்றவே தரிசனம் தருகிறார், பிகில் என்று நாகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் மதுரையில் கொரோனா மறந்து அனைவரின் வீட்டிலும் பிகில் சத்தம்.

உச்சம்
நடிகர் விஜய் டிஆர்பியின் அசைக்க முடியாத உச்சம், என்று போஸ்டர் ஒட்டி உள்ளனர். பொதுவாக தியேட்டரில் படம் ரிலீஸ் ஆனால்தான் பெரிய அளவில் போஸ்டர்கள் ஒட்டப்படும் . ஆனால் விஜய் படத்திற்காக டிவியில் ஒளிபரப்பாகும் போதே அவரின் ரசிகர்கள் போஸ்டர்கள் ஓட்டுகிறார்கள். தியேட்டர்கள் செயல்படாத நேரத்திலும் பிகில் படத்தை விஜய் ரசிகர்கள் மாஸாக கொண்டாடி உள்ளனர்.

பெரிய சண்டை
இந்த நிலையில் இந்த போஸ்டர்கள் காரணமாக டிவிட்டரில் இன்னொரு பக்கம் விஜய் அஜித் சண்டையும் கூட வந்துள்ளது. விஜய் ரசிகர்களின் போஸ்டர்களை கிண்டல் செய்து அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள். மாறாக அஜித்தை கிண்டல் செய்தது பல்வேறு டேக்குகளை விஜய் ரசிகர்கள் களமிறக்கி உள்ளனர். இதனால் டிவிட்டாரே அதகளமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications