அழிவில் காங்கிரஸ் - ஐரோப்பாவில் ராகுல் காந்தி.. பீகார் தேர்தல் தோல்வியால் விமர்சித்த பிரபலம்
சென்னை: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக கூட்டணி மொத்தம் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் ‛மகாகத்பந்தன்' கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தம் 35 தொகுதிகளில் முடங்கி உள்ளது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இப்படி காங்கிரஸ் படுமோசமான சூழலில் உள்ள நிலையி்ல ராகுல் காந்தி வேலை முடிந்தால் ஐரோப்பா சென்றுவிடுவார். அவர் மக்கள் அணுகக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் நிலை மோசமாகும்'' என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.மாறாக எதிர்க்கட்சிகளின் ‛மகாகத்பந்தன்' கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பாஜக கூட்டணியில் பாஜக 89 தொகுதி, நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதி, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மாறாக ‛மகாகத்பந்தன்' கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் தான் பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ், ‛ஒன் இந்தியா தமிழ்' சேனலுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ‛‛இந்த தேர்தல் முடிவுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு தான் வாழ்த்து சொல்ல வேண்டும். அவர் தான் சாதித்து காண்பித்துள்ளார். எக்ஸிட் போலை விட ஸ்வீப்பாக காண்பிக்க முடியும் என்று அதனை செய்து காட்டி உள்ளார். 4 பேரின் பிரசாரம் முக்கியம்.
அமித்ஷா மற்றும் தலைவர் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.இவர்கள் 2 பேரும் SIR-ரில் விளையாடி தேர்தல் ஆணையத்தை வைத்து இந்த வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளனர். இன்னொரு பக்கம் பார்த்தால் பிரதமர் மோடி - நிதிஷ் குமார் ஆகியோர் சேர்ந்து கிட்டத்தட்ட 75 லட்சம் பேருக்கு ரூ.7,500 கோடி கொடுத்து வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ளனர். அதிகாரமும், பணமும் இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
எங்கே தோற்க வேண்டும். ஜெயிக்க வேண்டும் என்று பாஜகவுக்கு தெரியும். எல்லா இடத்திலும் அவர்கள் விளையாடமாட்டார்கள். எல்லாமே அவர்களின் கையில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் நிதிஷ் குமார் முதல்வராக இருந்துள்ளார். இதில் பதினான்கரை ஆண்டுகாலம் பாஜக - நிதிஷ் குமார் கூட்டணி ஆட்சி இருந்துள்ளது. மீதமுள்ள ஐந்தரை ஆண்டுகள் மட்டும் தான் நிதிஷ் குமார் தனியாகவும், காங்கிரஸ், ஆர்ஜேடி ஆதரவுடன் ஆட்சியில் இருந்துள்ளார். 20 ஆண்டு காலத்தில் ஆட்சியில் இருந்தாலும் பீகாரில் வறுமை கோடு சதவீதம் 66 ஆக உள்ளது.
தேர்தலுக்கு முன்பாக 75 லட்சம் பெண்களுக்கு 10 ஆயிரம் நேரடியாக வங்கி கணக்கிற்கு போட்டுள்ளனர். வேறு தேர்தல் ஆணையம் இருந்திருந்தால் அதனை நிறுத்தி இருக்கும். ஆனால் இந்த தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது. SIR என்பது பாஜகவின் வெற்றியாக மாறி உள்ளது. இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்பட மற்றவர்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது.
அதேபோல் ஜாதி வாக்குகளை பாஜக நன்றாக ஒருங்கிணைத்துள்ளது. இதுவும் பாஜகவின் வெற்றிக்கு காரணம். இந்த விஷயத்தில் காங்கிரஸ் -தேஜஸ்வி யாதவ் ஃபெயிலாகி உள்ளனர். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். SIRக்கு எதிராக இந்தியா முழுவதும் பெரிய போராட்டம் நடத்த வேண்டும். SIR-யில் எஸ்சி, எஸ்டி, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் ஓட்டுரிமையை நீக்கினால் தமிழ்நாட்டிலும் இதே முடிவு வரும். இந்த தேர்தல் முடிவை கொண்டு வந்து காட்டிவிடுவார்கள்.
பிரதமர் டிரஸ் மாற்றுவதற்கு தான் இந்தியாவில் வந்து செல்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியா வந்துவிடுவார். இல்லாவிட்டால் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் இந்தியா வருவார். இது பிரதமர். அதேமாதிரி ராகுல் காந்தியும், வேலை முடிந்தால் ஐரோப்பா சென்றுவிடுவார். அப்படி என்றால் இங்குள்ள மக்கள் என்ன நினைப்பார்கள். எப்போதுமே ஒரு தலைவர் என்பவர் மக்களால் அணுககூடியவராக இருக்க வேண்டும். பிரச்சனை என்றால் பாஜக நிற்கிறது. ஆனால் காங்கிரஸ் இல்லை. இதனால் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கின்றனர்.
பாஜக 200க்கும் மேல் வெற்றி பெற்றிருந்தாலும் நூலிழை வித்தியாசம் எத்தனை தொகுதிகளில் உள்ளது. அதிகபட்ச ஓட்டு வித்தியாசம் எத்தனை தொகுதிகளில் உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். அப்போது தான் தேர்தலில் என்ன நடந்து இருக்கிறது? என்பது நமக்கு தெரியும். ஓட்டு திருட்ட எவ்வளவு நடந்துள்ளது என்ன ? என்பதை இன்னொரு டீம் போட்டு ராகுல் காந்தி பார்த்து ஒரு சதவீதம் கொடுப்பார். அதன்பிறகு தான் தெரியும். தோற்றப்பிறகு ஆராய்ந்து பயனில்லை. பாஜக வெற்றி பெற்று கொண்டே செல்லும்.
இதனால் வலிமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு தடைக்கு எப்படி முழுமையான போராட்டம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோ அதேபோல் செய்ய வேண்டும். ஒரு வாரம் இந்தியாவே ஸ்தம்பிக்க வைக்க கூடிய அளவுக்கு அறப்போராட்டத்தை முன்னெடுத்தால் இந்த தேர்தல் ஆணையம் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றி மக்கள் எண்ணங்களுக்கு எதிரான தேர்தல் முடிவை கொண்டு வராது'' என கூறியுள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications