2024ல் ஆருடம் சொன்ன அதே டீம்.. பீகாரில் பாஜக கூட்டணிக்கு தோல்வி! DB Live கணிப்பால் திடீர் ட்விஸ்ட்!
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 300 இடங்களை தாண்டாதுனு கருத்துக்கணிப்பு வெளியிட்டிருந்த DB Live, தற்போது பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வியடையும் என்று கணித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
பீகார் தேர்தலில் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி வெற்றி வாய்ப்பு உள்ளதாக DB Live கருத்துக் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 95 முதல் 109 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.. ஆனால் அவர்கள் மெஜாரிட்டி பெற முடியும்.
காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 130 முதல் 144 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பீகாரில் அவர்கள் ஆட்சியை பிடிப்பார்கள். மற்றவை 0-8 இடங்களில் வெல்லும் என்றும் இதில் கணிக்கப்பட்டு உள்ளது.
2024 லோக்சபா தேர்தல் கணிப்பு
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 300 இடங்களை தாண்டாதுனு கருத்துக்கணிப்பு வெளியிட்டிருந்த DB Live பெரிய கவனம் பெற்றது. அப்போது 2024 மக்களவைத் தேர்தல் குறித்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று கணித்த போதிலும், DB லைவ் நடத்திய கருத்துக் கணிப்பில் மாறுபட்ட தகவல் வெளியாகின.

அந்த கருத்துக் கணிப்பின்படி, இந்தியா கூட்டணி 255 முதல் 290 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் கூறியது. அதே நேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 201 முதல் 241 இடங்களைப் பெற வாய்ப்புள்ளதாகவும் DB லைவ் கூறியுள்ளது. இதில் காங்கிரஸ் பற்றி குறிப்பிட்ட கணிப்பு பொய்த்து போனாலும்.. பாஜக தஹனிப்பட்ட வகையில் 240 இடங்களை மட்டுமே வென்றது.. இந்த கணிப்பை கவனிக்க வைத்தது.
தற்போது பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வியடையும் என்று கணித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
பீகார் கணிப்புகள்
அதே சமயம் பீகார் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக போல் டயரி கருத்துக் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 184 முதல் 209 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்று போல் டயரி கூறி உள்ளது.
காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 32 முதல் 49 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு என்று போல் டயரி கூறி உள்ளது. மற்றவை 1-5 இடங்களில் வெல்லும் என்றும் இதில் கணிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி தேர்தலை சரியாக கணித்த போல் டைரி இந்த பீகார் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வெற்றி என்று கணித்துள்ளது. டெல்லியில் 70 இடங்களில் பாஜக 42-50 இடங்களை வெல்லும் என்று இந்த நிறுவனம் கணித்தது. பாஜக 48 இடங்களை வென்றது. அதேபோல் ஆம் ஆத்மி 18-25 இடங்களை வெல்லும் என்று கணித்தது. அதேபோல் அப்போது ஆம் ஆத் 22 இடங்களை வென்றது. அதேபோல் இந்த முறை பீகாரில் பீகார் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக போல் டயரி கருத்துக் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. பாஜக - ஜேடியூவின் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகா கூட்டணியான மகாகத்பந்தனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்தது. 122 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கும் பணி நவம்பர் 14 அன்று நடைபெறும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் 14 லட்சம் புதிய வாக்காளர்கள் உட்பட 7.4 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications