கொத்தாக 8 அமைச்சர்களை அள்ளிய பீகார்.. ஸ்மார்ட் ஆட்டம் ஆடிய நிதிஷ் குமார்.. யாரெல்லாம் மினிஸ்டர்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க உதவும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு இரண்டு அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

லோக்சபா 2024 தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாமல் வீழ்ந்து உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இன்னும் சில உதிரி கட்சிகள் சேர்ந்து ஆதரவு கொடுத்தால் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும். 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Lok Sabha Election 2024 Narendra Modi 2024

240 இடங்களில் பாஜக வென்றுள்ளது இதனால் பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை. இதில் பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.

இன்று அமைச்சரவை பொறுப்பேற்பு: இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சரவை பொறுப்பேற்கிறது. பிரதமர் மோடி இன்று 7.15 மணிக்கு பதவி ஏற்கிறார். 2024 லோக்சபா தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க உதவும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு இரண்டு அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மொத்தமாக 8 அமைச்சர்கள் பீகாரில் இருந்து பதவி ஏற்கிறார்கள்.

சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி கட்சி-ராம் விலாஸ்)
கிரிராஜ் சிங் (பாஜக)
ஜிதன் ராம் மஞ்சி (இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா)
ராம் நாத் தாக்கூர் (ஜேடியு)
லாலன் சிங் (ஜேடியு)
நித்யானந்த் ராய் (பாஜக)
ராஜ் பூஷன் சௌத்ரி (விகாஷீல் இன்சான் பார்ட்டி)
சதீஷ் துபே (பாஜக)

அமைச்சர்கள் யார் யார்?:

சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி கட்சி-ராம் விலாஸ்): சிராக் குமார் பாஸ்வான் 2021 முதல் லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) தலைவராகவும், 2019 முதல் 2021 வரை லோக் ஜனசக்தி கட்சியின் துணை தலைவராகவும் உள்ளார். இவர் 2024 லோக்சபா தேர்தலில் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றார். 2014ல் இருந்து இவர் மக்களவை உறுப்பினராக உள்ளார். மறைந்த நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் ஆவார் இவர்.

கிரிராஜ் சிங் (பாஜக): கிரிராஜ் சிங் கடந்த மோடி ஆட்சியில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த 17வது மக்களவை தேர்தலில் பெகுசராய் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். அவர் முன்பு பீகார் அரசில் கூட்டுறவு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள வள மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பாஜகவின் மூத்த தலைவரான இவர் பீகாரில் பல அமைச்சரவை பொறுப்பிலும், அரசியல் பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.

ஜிதன் ராம் மஞ்சி (இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா): ஜிதன் ராம் மஞ்சி பீகாரில் மே 2014 முதல் 20 பிப்ரவரி 2015 வரை முதலமைச்சராக பணியாற்றினார். அவர் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் (HAM) நிறுவனத் தலைவர் ஆவார். முன்னதாக, அவர் பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

சந்திரசேகர் சிங், பிந்தேஸ்வரி துபே, சத்யேந்திர நாராயண் சின்ஹா, ஜெகநாத் மிஸ்ரா, லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி போன்ற பல முதல்வர்களின் கீழ் அமைச்சராக இருந்துள்ளார். தற்போது கயா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். 2024 இந்திய பொதுத் தேர்தலில் கயா தொகுதியில் இருந்து இவர் மீண்டும் வெற்றி பெற்றார்.

ராம் நாத் தாக்கூர் (ஜேடியு): ராஜ்ய சபாவை சேர்ந்த ராம் நாத் தாக்கூர் மத்திய அமைச்சர் ஆகிறார். ராம்நாத் தாக்கூர் ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவில் பீகார் எம்பியாக உள்ளார். அவர் ராஜ்யசபாவில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராகவும் உள்ளார்.

பீகார் சட்ட மேலவை உறுப்பினராக இருந்த அவர், லாலு பிரசாத்தின் முதல் அமைச்சரவையில் கரும்புத் தொழில் துறை அமைச்சரானார். நவம்பர் 2005 முதல் நவம்பர் 2010 வரை இரண்டாவது ஆட்சியில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் வருவாய் மற்றும் நில சீர்திருத்தங்கள், சட்டம், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக இருந்தார். தற்போது மத்திய அமைச்சராகிறார்.

லாலன் சிங் (ஜேடியு): லாலன் சிங் என்ற ராஜீவ் ரஞ்சன் சிங் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து முங்கரைப் பகுதி எம்பியாக தேர்வாகி உள்ளார். அவர் 31 ஜூலை 2021 முதல் 29 டிசம்பர் 2023 வரை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். JD(U) பீகார் பிரிவுத் மாநில தலைவராகவும் இருந்தார்.

மே 2014 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், ஜூன் 2014 இல் பீகார் சட்ட மேலவை உறுப்பினராக அவர் பரிந்துரைக்கப்பட்டார். அதன்பின் 2019 லோக்சபா தேர்தலில் இந்தியாவின் 15 வது மக்களவை உறுப்பினராக தேர்வானார். பீகாரின் முங்கர் மக்களவை தொகுதியை தற்போது பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

நித்யானந்த் ராய் (பாஜக): உள்துறை இணை அமைச்சரான நித்யானந்தா ராய் மீண்டும் பாஜக சார்பாக அமைச்சராகிறார் . நித்யானந்த் ராய், 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் உஜியார்பூரில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000, பிப்ரவரி-2005, அக்டோபர்- 2005 மற்றும் 201 வரை பீகார் சட்டப் பேரவையின் ஹாஜிபூர் தொகுதியில் எம்எல்ஏவாகவும் இருந்தார்.

ராஜ் பூஷன் சௌத்ரி (விகாஷீல் இன்சான் பார்ட்டி): ராஜ் பூஷன் சௌத்ரி லோக்சபா பொதுத் தேர்தலில் பீகாரின் முசாபர்பூர் தொகுதியில் இருந்து 150,936 வாக்குகள் வித்தியாசத்தில் அஜய் நிஷாத்தை (INC) தோற்கடித்து வெற்றி பெற்றார். இப்போது மத்திய அமைச்சராகிறார்.

சதீஷ் துபே (பாஜக): சதீஷ் துபே ராஜ்ய சபா எம்பி ஆவார்.அவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக வால்மீகி நகர் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் முன்னதாக 2010 இல் நாட்கடியாகஞ்சிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+