கல்லீரல் பிரச்சினை மட்டுமில்லை! யாரோ செய்த வேலை! சந்தேகம் கிளப்பும் பிஜிலி ரமேஷ் மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமெடி நடிகர் பிஜிலி ரமேஷின் (45) உடல்நிலை இந்த அளவுக்கு மோசமடைந்ததற்கு வெறும் குடி மட்டும் காரணமாக இருக்காது, யாரோ செய்த வேலை என அவருடைய மனைவி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

யூடியூப் பிராங்க் மூலம் பிரபலமடைந்த பிஜிலி ரமேஷ், நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். பிளாக் ஷீப் யூடியூப் சேனலின் பிராங்க் வீடியோ மூலமாக பிரபலமடைந்தவர் ரமேஷ். இவர் ஹிப் ஹாப் ஆதி நடித்த நட்பே துணை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Bijili Ramesh death

அது போல் கோமாளி, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். இப்படிப்பட்ட பிஜிலி ரமேஷ் குடிப்பழக்கத்தால் உடல் முழுவதும் வீங்கி, வயிற்றில் இருந்து திரவம் கசிந்து உடல்நிலை மோசமாகி இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார்.

பிஜிலி ரமேஷின் உடல்நிலைக்கு என்ன ஆச்சு என அவரது மனைவியிடம் கேட்டபோது அவர் கூறுகையில், குடித்து குடித்து கல்லீரல் கெட்டுவிட்டதாக சொல்கிறார்கள். கால்கள் வீங்கிவிட்டது, வயிறும் வீங்கிவிட்டது. முகம் கூட வீங்கி இருந்தது. ஸ்டான்லியில் சிகிச்சை எடுத்ததால் அது குறைந்தது.

அவரால் எழுந்து நடக்க கூட முடியாது. சாப்பாடும் குறைந்துவிட்டது. ஏதோ ஒரு வாய் ரெண்டு வாய்தான் சாப்பிடுகிறார் . நீராகாரமும் நிறைய கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். கல்லீரல் முழுவதும் அழுகி விட்டது. கல்லீரல், கால் வீக்கத்தை எதுவும் செய்ய முடியாது என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்.

இருக்கும் வரை இப்படியே இருக்க வேண்டியதுதான் என்றார்கள். ஆனால் எனக்கென்னவோ இது கல்லீரலால் ஏற்பட்டது போல் தெரியவில்லை. இவரை விட மொடா குடிகாரன் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. எனவே என் கணவருக்கு யாரோ ஏதோ செய்திருக்கிறார்கள் என சந்தேகம் கிளப்பியுள்ளார்.

பிஜிலி ரமேஷின் மனைவி சொல்ல வருவது அவருக்கு செய்வினை செய்துவிட்டார்கள் என்கிறாரா, இல்லை குடிக்கும் போது மதுவில் யாராவது தொழில் போட்டி காரணமாக எதையாவது கலந்து கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை சாகடிக்க முயற்சித்துள்ளார்கள் என சொல்கிறாரா என்பது புரியவில்லை. இன்று அதிகாலை பிஜிலி ரமேஷ் உயிரிழந்துவிட்டார். இதன் பிறகு அவருடைய மனைவி என்ன நடந்தது என்ற உண்மையை சொல்ல கூடும் என தெரிகிறது.

தனது ஒரே மகனை நினைத்து பிஜிலி ரமேஷ் உருகினார். தனக்கு பிறகு தனது மகனும் மனைவியும் என்ன ஆக போகிறார்களோ என மனவேதனை அடைந்தார். பாபா முத்திரை போடும் இவர் தீவிர ரஜினியின் ரசிகர். தனது இன்ஸ்டா ஐடியில் கூட டிஸ்கிரிப்ஷனில் தீவிர ரஜினி ரசிகர் என்றுதான் போட்டுள்ளார். இவர் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என விரும்பினார். லால் சலாம் படத்தில் வாய்ப்பு வரும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே விஞ்சியது.

பிஜிலி ரமேஷுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனராம். இதற்கு தனியார் மருத்துவமனையில் 30 லட்சத்திற்கு மேல் ஆகும் என பிஜிலியின் மனைவிக்கு தெரிந்தவர்கள் சொன்னார்களாம். ஆனால் அரசு மருத்துவமனையில் வெறும் ரூ 3 லட்சம்தான் ஆகும். ஆயினும் ஆபரேஷன் செய்ய அவரது உடல் ஒத்துழைக்காது என்ற பயம் இருந்ததாக மனைவி கூறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+