குடியால் சீரழிந்த பிஜிலி ரமேஷ்.. ஒரே வீடியோ தான்.. மொத்தமாய் மாறிய வாழ்க்கை! உறவினர்கள் சொல்வதென்ன?
சென்னை: ஒரே ஒரு யூட்யூப் வீடியோவில் உலக பேமஸ் ஆகி சினிமா வரை சென்று கலக்கி வந்த பிஜிலி ரமேஷ் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார் (Bijili ramesh death death). அவருக்கு வயது 46. சினிமாவில் வாய்ப்பு கிடைத்தும் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் குடி பழக்கத்தால் அவர் உடல்நலம் குன்றி உயிரிழந்ததாகக் கூறுகின்றனர் அவரது உறவினர்கள்.
சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருந்து அதன் மூலம் சினிமாவுக்குச் சென்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வகையில் ஜிபி முத்து, பிஜிலி ரமேஷ் உள்ளிட்டோரை குறிப்பிட்டு சொல்லலாம்..

சமூக வலைதளங்களில் மீம் கண்டன்ட்டாக இருந்த பிஜிலி ரமேஷ், அதற்குப் பிறகு ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டினார். பின்னர் பொன்மகள் வந்தாள், நட்பே துணை, கோமாளி, ஆடை உள்ளிட்ட பல படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் உருவாக்கினார் பிஜிலி ரமேஷ். பல படங்களில் ஒரு சில சீன்களில் அவர் வந்தால் கூட ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவுக்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் இருந்தது. தீவிர ரஜினி ரசிகரான அவர் ஒரு யூட்யூப் சேனல் நடத்திய பிராங்க் ஷோ மூலம் தான் உலக அளவில் பேமஸ் ஆனார். தற்போது விஜே சித்து விலாக்ஸ் என்ற பெயரில் சேனல் வைத்திருக்கும் விஜே சித்து 'ஃபன் பண்றோம்' என்ற காமெடி நிகழ்ச்சியை பிளாக் ஷீப் என்ற யூட்யூப் சேனலில் முன்பு நடத்தி வந்தார்.
சாலையில் வருவோர் போர்களிடம் பேச்சுக் கொடுப்பதும் அதில் கிடைக்கும் கண்டன்டுகளை வைத்து காமெடியாக தருவது தான் இந்த நிகழ்ச்சியின் கரு. இதில் சில நேரங்களில் விஜே சித்து அடி கூட வாங்கி இருக்கிறார். அப்படி பிராங்க் ஷோ ஒன்று நடந்த போது திடீரென அதில் வந்தவர் தான் பிஜிலி ரமேஷ். தீவிர ரஜினி ரசிகரான அவர் அந்த நிகழ்ச்சியில் வெள்ளந்தியாக பேச அது உலக அளவில் பேமஸ் ஆனது. மில்லியன் கணக்கான வியூவ்ஸ் அந்த வீடியோவுக்கு கிடைத்தது.
இதை எடுத்து பல யூட்யூப் சேனல்கள் அவரை துரத்தி துரத்தி பேட்டி எடுத்தன. தொடர்ந்து பல மீம்ஸ்களில் ரமேஷ் ட்ரெண்டானார். அதைத்தொடர்ந்து அவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு கவனிக்க வைத்தது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக பிஜிலி ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சினிமாவில் நடித்திருந்தாலும் தனக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என பிஜிலி ரமேஷ் கூறியிருந்தார். இதை அடுத்து திரைத்துறையில் இருந்த பலர் அவருக்கு உதவினர். மேலும் சிகிச்சைக்குக் கூட பணம் இல்லாமல் தவிக்கும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தான் அவர் இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். அதிகாலையில் அவர் உயரிழந்த நிலையில் இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதை அடுத்து திரைத்துறையினரும் ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அளவுக்கு மீறிய மதுப்பழக்கமே பிஜிலி ரமேஷ் உயிரிழக்க காரணம் என கூறுகின்றனர் அவரது உறவினர்கள். பிராங்க் ஷோ மூலம் பிரபலமான போதும் அதற்குப் பிறகு சினிமாவுக்கு வந்த போதும் பிஜிலி ரமேஷ் அளவுக்கு அதிகமாக மது குடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிகாலை தொடங்கி இரவு வரை மதுப்பழக்கத்தில் சிக்கித் தவித்த அவர் அதன் காரணமாகவே உடல்நல குறைவு ஏற்பட்டு இருந்திருப்பதாக வேதனையுடன் கூறுகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications