விபத்துக்குள்ளான டிடிஎப் வாசன் கார்.. பைக்கில் வந்தவருக்கு காயம்! சென்னை சாலையில் பெரும் பரபரப்பு
சென்னை: பிரபல பைக் யூடியூபரான டிடிஎப் வாசன் சென்ற கார் மோதி பைக்கில் வந்தவர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பைக் யூடியூபராக வலம் வருபவர் டிடிஎப் வாசன். விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளில் பல்வேறு இடங்களுக்கு சென்று யூடியூபில் வீடியோ வெளியிட்டு பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். பைக்கில் அதிவேகமாக பயணிப்பது, சட்டத்துக்கு முரணாக சாகசம் செய்வது என பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் இவர் நடிகராகவும் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அதன் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. பைக்கில் பறந்தபடி டிடிஎப் வாசன் நிற்கும் அந்த போஸ்டரை பார்த்து படத்திலும் இவர் பைக்கராக நடிக்கிறார் என்று மக்கள் கருதினர்.
இந்த நிலையில் சென்னையில் டிடிஎப் வாசன் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அமைந்தகரை அருகே டிடிஎப் வாசன் சென்றுகொண்டு இருந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் பைக்கில் சென்றவருக்கு காயமடைந்தது. காரின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்த விபத்தில் டிடிஎப் வாசன் காயங்கள் இன்றி தப்பினார். கார் விபத்துக்குள்ளானவுடன் அவர் அதில் இருந்து கீழே இறங்கி அங்கு வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications