இலங்கை தமிழர்களின் அரசியல் முகம்..விடுதலைப் புலிகளை தமிழர் பிரநிதிகளாக ஏற்றவர் இரா.சம்பந்தன்!
சென்னை: இலங்கை தமிழர்களின் அரசியல் முகமாக, தமிழீழ விடுதலைப் புலிகளே ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் என ஏற்றுக் கொண்டவராக திகழ்ந்தவர் மறைந்த பெரியவர் இரா.சம்பந்தன். 1977-ம் ஆண்டு முதல் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதியாக உரத்து குரல் கொடுத்து வந்த பெரியவர் இரா.சம்பந்தன் மறைவு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.
1933-ம் ஆண்டு இலங்கை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த போது திருகோணமலையில் பிறந்தவர் இரா.சம்பந்தன். 1977-ம் ஆண்டு இலங்கை பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு எம்பியானார். 1983-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் வெட்டி எறியப்பட்ட இனப்படுகொலைகளைக் கண்டித்து அப்போது தமிழ் எம்பிக்கள் அனைவரும் இலங்கை நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இதனால் இரா.சம்பந்தன் எம்பி பதவியும் பறிபோனது.

1980களில் தனித் தமிழீழம் கோரி விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் யுத்தம் நடத்தின. 1989-ல் இந்திய அமைதிப்படை வெளியேறிய பின்னர் இந்திய சார்பு ஆயுத குழுக்கள் ஆதரவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அப்போது இரா.சம்பந்தன் தோல்வியைத் தழுவினார்.
1990களில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் கை ஓங்கியது. 2001-ல்
இரா.சம்பந்தனின் இலங்கை தமிழரசு, ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட ஈபிஆர்எல்எப், டெலோ உள்ளிட்டவைகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவரானார் இரா.சம்பந்தன். 2001 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இரா.சம்பந்தன் மீண்டும் வெற்றி பெற்று எம்பியானார்.
இதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஈழத் தமிழர்களின் பிரதிநிதி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்வதாக இரா.சம்பந்தன் அறிவித்தார். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவை எதிர்கொண்டது. 2004, 2010, 2015, 2020 ஆகிய இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பியானார் இரா.சம்பந்தன். 2015-ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர் பெரியவர் இரா.சம்பந்தன்.
இலங்கை தமிழர்களில் முதுபெரும் அரசியல் தலைவராக திகழ்ந்தவர்; பிரதார் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு செல்லும் போது தமிழர் தரப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருடன் ஆலோசனை நடத்துவது நடைமுறையாக இருந்து வந்தது. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிய நட்புறவில் இருந்து வந்தார் பெரியவர் இரா.சம்பந்தன். 91 வயதில் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இரா.சம்பந்தன் காலமானார். ஈழத் தமிழரின் முதுபெரும் அரசியல் முகம் ஒன்று விடை பெற்றுவிட்டது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications