இனி இதை செய்யலன்னா சம்பளம் முழுசா வராது.. சென்னை எம்டிசி பஸ் ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
சென்னை: சென்னை மாநகர பேருந்து கழக ஊழியர்களுக்கு மிக முக்கியமான உத்தரவு ஒன்றை போக்குவரத்து கழகம் பிறப்பித்துள்ளது. ஊழியர்களின் வருகை பதிவு தொடர்பான முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாநகர அல்லது மண்டல போக்குவரத்து கழகத்திடமிருந்து வேறுபட்டது. பிற நகரங்களை போள அல்லாமல் சென்னையில் முழுவதும் அரசு பேருந்துகளே இயங்குகின்றன. ஓரிரு தனியார் பேருந்துகள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் வந்து செல்கின்றன. தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதாவது தனியார் பேருந்துகளை காண முடியும்.

மற்றபடி முழுமையாக சென்னைக்குள் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளே ஓடுகின்றன. சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் மாநகர பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். சென்னை நகருக்குள் ஆயிரக்கணக்கான மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையின் மையப்பகுதியில் இருந்து 50 கிமீ தூரத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணிபுரிகிறார்கள். அதேபோல பணிமனைகளில் டிரைவர, கண்டக்டர் தவிர்த்து பிற தொழில் நுட்ப பணிகளிலும் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த நிலையில் தான், மாநகர போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று சென்றுள்ளது. மாநகர பேருந்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் அனைவரும் தவறாமல் பயோமெட்ரிக் மூலம் வருகையை பதிவு செய்வது அவசியம். காலை, மாலை என இரு வேளைகளிலும் பயோமெட்ரிக்கில் பதிவு செய்ய வேண்டும். காலை 10.11 முதல் 11 மணிக்குள் வருவோர் தாமத வருகையாக கருதப்படுவார்கள்.
மாதத்துக்கு மூன்று முறைக்கு மேல் தாமதமாக வந்தால் ஒவ்வொரு தாமத வருகைக்கும் அரை நாள் விடுப்பு கழிக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் வரும் பட்சத்தில் அரைநாள் விடுப்பு எடுத்ததாக கருதப்படுவர். காலையில் பதிவு செய்து, மாலையில் பதிவு இல்லையென்றால் அரை நாள் விடுப்பாக எடுத்துக்கொள்ளபடும்.
ஓ.டி. காரணமாக வெளியே சென்று வருவோர் அதற்குரிய ஃபார்ம் பூர்த்தி செய்து சம்பளப்பட்டியலில் சேர்க்க வேண்டும். பயோமெட்ரிக்கில் பதிவு செய்ய தவறினால் விடுப்பு அல்லது ஆப்சென்ட் ஆக கருதப்படும். வழித்தடங்களில் பஸ்சை இயக்கும் டிரைவர்கள், கண்டக்டர்கள் புறப்படும்போதும், பணி முடித்த பின்னரும் வருகையை பதிவு செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications