ஒரு நிமிஷம் நில்லுங்க.. யுபிஐ பேமெண்டுக்கு ’பின்’ போடப் போறீங்களா? இன்று முதல் மெகா மாற்றம்..சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது சாதாரண பெட்டிக்கடைகள் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை யுபிஐ பரிவர்த்தனைகளை ஏற்றுக் கொள்கின்றன. இந்த நிலையில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை இன்று முதல் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற அப்ளிகேஷன்களில் நடைமுறைக்கு வருகிறது. அதாவது பின் நம்பர் இல்லாமல் மொபைல் ஃபோன் மூலம் கைரேகை, முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் அடையாளத்தை பயன்படுத்தி யுபிஐ வழியாக பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

யுபிஐ சேவையை பயன்படுத்தாதவர்களை இப்போது விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. கையில் ஒரு பைசா ரொக்கமாக கொண்டு செல்லாமல், பெட்டி கடை முதல் வணிக வளாகம் முதல் நினைத்ததை தற்போது யுபிஐ செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட இந்த யுபிஐ மூலமாக பணப்பரிமாற்றம் எளிதாக இருப்பதால், பொதுமக்களும் அதிக அளவில் இதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். யுபிஐ சேவைகளுக்காக போன் பே, ஜிபே, பேடிஎம், அமேசான் பே உள்ளிட்ட பல்வேறு மொபைல் அப்ளிகேஷன்கள் செயல்பட்டு வருகிறது.

Biometric UPI Payments Go Live

டிஜிட்டல் பேமெண்ட்

இது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் வங்கி மூலமே யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டை கூட தற்போது போன் பே உள்ளிட்ட அப்ளிகேஷன்களில் இணைத்து சிறுக சிறுக செலவழித்துக் கொள்ளலாம். போன் பே உள்ளிட்டவை வந்த பிறகு பலர் கைகளில் பணமே வைத்துக் கொள்வதில்லை. எதற்கெடுத்தாலும் யுபிஐ ஸ்கேனர் இருக்கிறதா என்று பெட்டி கடைகளில் கூட கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் யுபிஐ சில நேரங்களில் முறைகேடுகளிலும் சிக்கிக் கொள்கிறது.

யுபிஐ

அதாவது இணையவழி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் பின் நம்பரை பயன்படுத்தி மோசடி, ஸ்கேனர் மூலம் மோசடி என பல்வேறு முறைகேடுகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். இதை அடுத்து மொபைல் போனில் உள்ள கைரேகை மற்றும் முக அங்கீகாரம் உள்ளிட்ட பயோமெட்ரிக் அடையாளங்கள் மூலம் யுபிஐ வழியாக பணம் செலுத்தும் அம்சம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதாவது கைரேகை அல்லது முக அடையாளத்தைக் கொண்டு UPI வழியாக பணம் செலுத்த முடியும்.

பயோமெட்ரிக் UPI

இதன் மூலம் கடைக்குச் செல்லும்போது, ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தும்போது பொதுவாக பயன்படுத்தும் பின்-நம்பரை டைப் செய்யத் தேவையில்லை. இந்த வசதியைப் பெற, பயனர்கள் தங்கள் Aadhaar-ல் சேமிக்கப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை பயன்படுத்தி வங்கியுடன் அல்லது UPI பயன்பாட்டு
செயலிகளான கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற அப்ளிகேஷன்களில் இணைக்க வேண்டும். ஒருமுறை பதிவு செய்யப்பட்டபின், செலுத்தும்போது கைரேகை அல்லது முக அங்கீகாரம் பொருந்தினால் பண பரிவர்த்தனை நடக்கும்.

ஆதார் பயோமெட்ரிக் UPI

யுபிஐயின் இந்த சேவை மூலம் PIN பகிர்வால் ஏற்படும் மோசடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைரேகை மற்றும் முக அங்கீகாரம் நகலெடுக்க முடியாதவை என்பதால், பரிவர்த்தனை பாதுகாப்பு அதிகரிக்கும். இதனால் சிலர் ஏற்கனவே பகிர்ந்த PIN-களை தவறாக பயன்படுத்துவது போன்ற மோசடிகள் குறைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், முக்கிய விஷயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், இதன் மூலம் உங்கள் போனின் பாதுகாப்பு, பயோமெட்ரிக் தரவுகளின் தனியுரிமை, மற்றும் பதிவு செயல்முறை சரியானதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், எல்லா போன்களும் கைரேகை, முக அடையாளத்துக்கு ஒத்துழைக்குமா என்பதையும் கவனிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+