40,000 கோழிகள் அழிப்பு.. தமிழகத்தை அதிர விடும் பறவை காய்ச்சல்... சிக்கன், முட்டை சாப்பிடலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடலூரில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுக்க உஷார் நிலையில் உள்ளது. அந்த பகுதிகளில் தற்காலிகமாக பிராய்லர் கோழி தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புரதச்சத்துக்காக முட்டை, சிக்கன் சாப்பிடுபவர்கள் அவற்றைத் தொடர்ந்து சாப்பிடலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கா பதிலை நாம் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் H5N1 வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 40,000 கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பிராய்லர் கோழி வளர்ப்புக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Bird Flu in Tamil Nadu Bird Flu Chicken Eggs

உத்தரவு

தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் சோமசுந்தரம், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பறவை காய்ச்சல் பொதுவாக பறவைகள் மத்தியில் தான் வேகமாக பரவும் என்றாலும் மனிதர்களுக்கு அரிதாக பரவ வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், இதுவரை தமிழகத்தில் மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்பதால் பொதுமக்கள் பதற்றமடைய தேவையில்லை.

பறவை காய்ச்சல்

அதேநேரம் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் இப்போது சிக்கன், முட்டை சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கும் வரும். இது குறித்து மருத்துவர் சாரு துவா கூறுகையில், "நன்றாக சமைத்த பிறகு சிக்கன், முட்டை சாப்பிட்டால் எந்தவொரு பாதிப்பும் வராது. H5N1 பறவை காய்ச்சல் வைரஸ்கள் முக்கியமாக பறவைகளையே பாதிக்கின்றன. இந்த வைரஸால் அதீத வெப்பத்தை தாங்க முடியாது, அழிந்துவிடும். எனவே, கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை அதீத வெப்பத்தில் நன்றாக சமைக்கும்போது வைரஸ் அழிந்துவிடும்" என்று அவர் விளக்கியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்தது 70 டிகிரி செல்சியஸ் எட்டும் அளவுக்கு நன்றாக சமைக்க வேண்டும். அதாவது இறைச்சியின் உட்புற வெப்பம் 70 டிகிரியை தொட வேண்டும். அப்படி சமைத்தாலே வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கூட அது அழிந்து போகுமாம்.

பாதிப்பு

பறவை காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ்களால் ஏற்படும் தொற்றுநோய். இதில் H5N1 என்பது கோழிகள் உள்ளிட்ட பறவைகளிடையே பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய வகையாகும். மனிதர்களுக்கு இந்தத் தொற்று ஏற்படுவது அரிது என்றாலும், பாதிக்கப்பட்ட பறவைகளை கையாள்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனவே, பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தேவையில்லாமல் செல்ல கூடாது. அங்கு இறந்த பறவைகளைத் தொடக்கூடாது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக நன்றாக சமைத்த சிக்கனில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றாலும் பச்சையாக அல்லது அரைகுறையாக வேகவைத்த சிக்கனில் ஆபத்து இருக்கிறது. அதேபோல முட்டைகளையும் பச்சையாகவும், ஆப் பாயில் அல்லது கலக்கி போல முழுமையாக வேக வைக்காமல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நன்றாக சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதுதான் பாதுகாப்பான அணுகுமுறை!

உணவில் புரத சத்து

தினசரி உணவில் முட்டை, கோழி இறைச்சியைச் சேர்த்துக்கொள்பவர்கள் அவற்றைத் திடீரென நிறுத்தினால் புரதச்சத்தை பெறுவதில் சிரமம் ஏற்படும். ஏனென்றால் ஒரு பெரிய முட்டையில் சுமார் 6 முதல் 7 கிராம் புரதச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் பி12, கோலின் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. அதேபோல் 100 கிராம் கோழி இறைச்சியில் சுமார் 30 கிராம் புரதம் உள்ளது. தசைகளை பராமரிக்கவும், உடல் திசுக்கள் சீரமைக்கப்படவும் இவை உதவுகிறது. எனவே பறவைக் காய்ச்சல் பாதிப்பு என்ற காரணத்துக்காக அரசு அறிவுறுத்தல் எதுவும் இல்லாத போது முட்டை, சிக்கனை உணவில் இருந்து முற்றிலும் நீக்க வேண்டியதில்லை. சரியாக சமைத்து சாப்பிட்டாலே போதும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+