பிறப்பு சான்றிதழ்.. இதுக்குதான் ரொம்ப தேவை.. விதவை சான்றிதழை எப்படி பெறுவது தெரியுமா? ஆவணங்கள் என்ன?
சென்னை: விதவை சான்றிதழை எப்படி பெற வேண்டும் தெரியுமா? இதற்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவையாக உள்ளன தெரியுமா?
ஆதார் கார்டை போலவே, ரேஷன் கார்டை போலவே, பிறப்பு சான்றிதழ்களும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், ஆதார் அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட அரசு வழங்கும் அடையாள அட்டைகளை பெறுவது வரை, இந்த பிறப்புச்சான்றிதழ் தேவையாக இருக்கிறது.
இந்த சான்றிதழை மருத்துவமனை நிர்வாகமே பதிவு செய்து கொடுத்து விடுகிறது. குழந்தையின் பெயரை மட்டும் நாம் பிறப்பு பதிவாளரிடம் சென்று தேவையான ஆவணங்களை அளித்து சேர்த்து கொள்ளலாம்.

புதிய நடைமுறை: இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.. அதுவும், 14 நாள்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும்,
சமீபத்தில் பிறப்பு சான்றிதழ், நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகியிருக்கிறது.. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம், திருத்தத்துடன் சமீபத்தில் அமலாக்கப்பட்டது.
ஒரே ஆவணம்: இந்த சட்டம் மூலம் இனி பிறப்பு சான்றிதழை முக்கியமான ஆவணமாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஆன்லைன் வழியாக மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழ்களை டவுன் லோடு செய்ய முடியும். ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறமோ அதேபோல் இதையும் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக, கல்வி நிலையங்களில் சேருவதற்கு இந்த பிறப்பு சான்றிதழ் பயன்படும்.. டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு, பாஸ்போர்ட் வழங்குதல் பணிகளுக்கு, வாக்காளர் பட்டியல் பெறுவதற்கு, ஆதார் எண் பதிவு பெறுவதற்கு, திருமணம் பதிவு செய்யவும், அரசு பணிகளில் சேரவும், இந்த பிறப்பு சான்றிதழை ஒரு ஆவணமாக நம்மால் இனி பயன்படுத்த முடியும்..
விதவை சான்றிதழ்: அதேபோல, அரசின் உதவித்தொகை உட்பட பல்வேறு சலுகைகளை பெறுவதற்கு விதவை சான்றிதழும் அவசியம்.. இந்த விதவை சான்றிதழை பெறுவதற்கு சில ஆவணங்கள் தேவையாக உள்ளன.. குறிப்பாக, விண்ணப்பதாரரின் போட்டோ, இருப்பிடச்சான்றிதழ், திருமணப்பதிவு சான்றிதழ், கணவன் இறப்பு சான்றிதழ் ஆகியவை தேவை ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற வெப்சைட்டில், சிட்டிசன் லாகின் ஆப்ஷன் மூலம் நுழைய வேண்டும்.
- பிறகு, Department Wise → Service Wise Option-ஐ கிளிக் செய்து Widow Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.. பிறகு, 'Proceed' என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது, உங்களுக்கான CAN எண்ணை உருவாக்க வேண்டும். இதனை ரிஜிஸ்டர் செய்யும்போது உங்களின் விவரங்களை நன்றாக படித்து பார்த்த பிறகே ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். அப்போது உங்களுக்கான எண் உருவாக்கப்படும்.
- பின்னர் List of Documents பகுதியில் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
- அடுத்து Self Declaration Form ஸ்கிரீனில் தோன்றும்.. அதனை டவுன்லோடு செய்து, பிறகு ஒப்பிட்டு மறுபடியும் ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
- இந்த சான்றிதழுக்கான ரூ.60 விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
- இப்போது உங்களது ஆவணங்கள் அதிகாரிகளால் சரிப்பார்க்கப்பட்ட பிறகு, உங்களது செல்போன் நம்பருக்கு மெசேஜ் வரும்
- இதே வெப்சைட்டில் உருவாக்கப்பட்ட லாகின் ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைவதன் மூலம் உங்களது சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications