பிறப்பு சான்றிதழில் உங்க பெயர் சேர்த்துட்டீங்களா? "இவங்க" மட்டும் உடனே சேருங்க.. வந்தது அறிவிப்பு
சென்னை: பிறப்பு சான்றிதழ்கள் குறித்து தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனரும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவாளருமான செல்வவிநாயகம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அது என்ன?
இந்தியாவின் முக்கிய சேவைகள் அனைத்திற்குமே ஒரே ஆவணமாகியிருக்கிறது பிறப்பு சான்றிதழ்... காரணம், ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, அரசு வேலை போன்றவற்றிற்கெல்லாம் பிறப்பு சான்றிதழ்கள் கட்டாயம் தேவைப்படுகிறது.
ஆவணங்கள்: இதைத்தவிர, திருமணப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கும் பிறப்பு சான்றிதழ்கள் ஆவணமாக தேவைப்படும்.. அந்தவகையில், சமீபத்தில் இதில், சட்ட திருத்தம் செய்யப்பட்டு பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக, ஆன்லைன் வழியாகவே மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறமோ அதேபோல் இதையும் பயன்படுத்த முடியும்.
பிறப்பு சான்றிதழ்: இந்நிலையில், பிறப்பு சான்றிதழ் குறித்து இன்னொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவாளர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனரும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவாளருமான செல்வவிநாயகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
குழந்தை பிறந்ததும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது சுகாதாரத்துறை வாயிலாக, பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அச்சான்றிதழ்களில், குழந்தை பிறந்த, 15 ஆண்டுகளுக்குள் பெயர் சேர்க்க வேண்டும். அவ்வாறு பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிசம்பர், 31க்குள் பெயர் சேர்க்க வேண்டும். அதற்குள் அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் முறையிட்டு பிறப்பு சான்றிதழ் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
பெற்றோர்: மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குனர்கள், பள்ளி மாணவர்களின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெயர் விடுபட்டிருந்தால், மாணவர்கள் வாயிலாக பெற்றோருக்கு தகவல் அளித்து, பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக, பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளரின் கையொப்பமிட்ட படிவம் பெற்று பெயர் சேர்க்கலாம். எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்தாண்டுக்குள் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு: முன்னதாக, இந்தியாவில் பிறந்த ஒரு குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதில், தாய், தந்தை இருவரின் மதத்தை தெரிவிப்பது கட்டாயம் என்று 3 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.. பெற்றோரின் மதத்தையும் சான்றிதழில் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கட்டாயமாக்கியிருக்கிறது.. குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோருக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications