Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிறப்பு சான்றிதழ் அவசியம்.. பெயரை மாற்றணுமா? சான்றிதழில் பிழையை திருத்தணுமா? அவ்வளவும் ஆன்லைனில் ஈஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறப்பு சான்றிதழ்களின் அவசியம் என்ன? பிறப்பு சான்றிதழை ஆன்லைனில் எளிதாக பெறுவது போலவே, பிழை இருந்தாலும் எளிதாக திருத்த முடியுமா? பிறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? பிறப்புச் சான்றிதழில் தந்தை பெயர் மாற்றம் செய்ய முடியுமா? அதற்கான நடைமுறை என்ன?

பிறப்பு சான்றிதழ்கள் தற்போது அவசியமான ஆவணமாகும்.. இது ஒருவரின் அடையாளமாகும்.. பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசும் சமீபத்தில் அறிவித்துள்ளது...

birth certificate online birth certificate

அடையாளம்: வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், கல்வி வளாகத்தில் சேருவதற்கு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், திருமண பதிவு, அரசு வேளைகளில் சேருவதற்கு என அனைத்திற்கும் இனி ஒரே அடையாள ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்கவும், மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேருவதற்கும், திருமணத்தை பதிவு செய்வதற்கும், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்றவற்றை பெறுவதற்கும் பிறப்பு சான்றிதழ் தேவையாகிறது. எனவேதான், பிறப்பு சான்றிதழ் பெறுவதை, அரசு எளிமைப்படுத்தியிருக்கிறது.

ஆன்லைன்: இந்த பிறப்பு சான்றிதழை மருத்துவமனை நிர்வாகமே பதிவு செய்து தந்துவிடும். குழந்தையின் பெயரை மட்டும் நாம் பிறப்பு பதிவாளரிடம் சென்று தேவையான ஆவணங்களை அளித்து சேர்த்து கொள்ளலாம். அதேபோல, ஆன்லைனில் இந்த சான்றிதழை பெற முடியும்.. பெற்றோரின் பிறப்பு சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ், மருத்துவமனையிலிருந்து குழந்தை பிறந்தது குறித்து வழங்கப்பட்ட கடிதத்தின் சான்று, பெற்றோரின் அடையாள சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

சென்னையில் உள்ளவர்கள் பிறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால், https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற வெப்சைட்டை நாடலாம். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற வெப்சைட் மூலம் சான்றிதழை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

பதிவிறக்கம்: சம்பந்தப்பட்ட வெப்சைட்டிற்குள் நுழைந்து, search ஆப்ஷனை கிளிக் செய்து, குழந்தை பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம், பிறந்த தேதி போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் "generate" என்பதை கிளிக் செய்தால், பிறப்பு சான்றிதழ் விவரங்கள் ஸ்கிரீனில் தெரியும்.. இதை கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
பிறப்புச் சான்றிதழில் தந்தை பெயரை மாற்ற வேண்டுமானால், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள பிறப்பு இறப்பு அதிகாரியை அணுக வேண்டும். பிறப்பு இறப்பு அதிகாரியிடம் இதுகுறித்து முறையாக விண்ணப்பித்து, அறிவிக்கப்பட்ட வாக்குமூலத்தை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.. பெற்றோரின் பெயரை மாற்ற விரும்பினால், துணை ஆவணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.. அதேபோல, பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வதற்கான ஆன்லைன் வழிமுறைகளும் உள்ளன.

விண்ணப்ப நிலை சரிபார்ப்பு: உங்கள் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க வேண்டுமானால், உங்கள் உள்ளூர் மாநகராட்சி அல்லது நகராட்சியின் இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்ப நிலையைச் சரிபார்க்க, உங்கள் விண்ணப்ப எண் தேவைப்படும்..

அதேபோல, பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், பிறப்பு சான்றிதழை எங்கு பதிவு செய்தீர்களோ, அதே அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். பிறப்பு சான்றிதழின் நகல் இல்லாவிட்டால், குழந்தை பிறந்த தேதி, பிறந்த இடத்தை கூறி விண்ணப்பிக்கலாம்.


இதை ஆன்லைனிலும் பெற முடியும்..

etownpanchayat.com என்ற இணையதளத்திற்கு சென்று, பிறப்பு விவரங்கள் என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்

- பிறப்புச் சான்றிதழின் இழப்பு அல்லது தொலைந்தது குறித்த உறுதிமொழி, விண்ணப்பதாரரின் பாஸ்போட் போட்டோ, ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம் போன்றவற்றை விணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

- விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.. விண்ணப்பக் கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

பிழை திருத்தலாம்: பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால், பெரும்பாலும், குழந்தையின் பெயர், பிறந்த தேதி, பெற்றோரின் பெயர், குழந்தை பிறந்த இடம், முகவரி, பாலினம் ஆகியவற்றில் ஏதேனும் பிழை (Clerical error) ஏற்படலாம்.

இதறகு பிறப்பு பதிவாளரை அல்லது, சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் இவர்களில் யாரையாவது அணுக வேண்டியிருக்கும். இதற்காக பிரத்யேகமாக மனு உள்ளது.. அதை முறையாக விண்ணபிக்க வேண்டும். குழந்தையின் பெற்றோரின் அடையாள சான்று, மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்றால் டிஸ்சார்ஜ் சம்மரி போன்றவற்றை இதற்கு ஆதாரமாக தர வேண்டும். இந்த ஆவணங்களை சரிபார்த்து, உங்களது மனுவையும் ஏற்று, பிழைகளையும் திருத்தி தருவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+