Bison OTT Release: "பைசன்" படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது! எந்த தளத்தில் பார்க்கலாம்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையன்று வெளியான திரைப்படம் தான் பைசன் காளமாடன். துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. இதற்கிடையே இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வருபவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என எல்லாப் படங்களுமே ஹிட் அடித்துள்ளது. விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி இவருடைய படங்கள் பட்டையைக் கிளப்பியிருக்கிறது.

மாரி செல்வராஜ்
ஹிட் இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான படம் தான் 'பைசன் காளமாடன்'.. இதில் துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், லால், அமீர், என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இந்தப் படம் கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. டியூட், டிசல் ஆகிய படங்களுடன் பைசன் படமும் கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதி வெளியானது.
கபடி
அப்போதே பைசன் படத்திற்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. நாளுக்கு நாள் வசூல் கூடிக் கொண்டே போனது. இந்திய கபடி வீரர் கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பைசன் படம் தியேட்டர்களில் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்தது. நடிகர் துருவ் விக்ரமுக்கு முதல் தியேட்டர் ஹிட் படமாகவும் இது அமைந்தது.
பைசன் திரைப்படம் சமூக மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி இந்தியாவிற்காக விளையாடிய கணேசனின் பயணத்தை நமக்குக் காட்டியது. இதற்கிடையே திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். தியேட்டரில் இப்படத்தை மிஸ் செய்தவர்கள் ஓடிடி ரீலிஸூக்காக காத்திருந்தனர்.
ஓடிடி ரிலீஸ்
இந்தப் படம் நவம்பர் கடைசியில் ஓடிடியில் வெளியாகும் என முன்பே தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும், எப்போது வெளியாகும் என்பதில் தெளிவு இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'பைசன்' திரைப்படம் வரும் நவம்பர் 21ம் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். 'பைசன்' படத்திற்குப் பிரசன்னா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தான் தீபாவளிக்கு வெளியான மற்றொரு படமான டியூட் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகியிருந்தது. இந்தச் சூழலில் தான் ஒரு வாரம் கழித்து இந்த வாரம் பைசன் படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications