கசக்கும் சர்க்கரை விலை.. 3 மாதங்களுக்கு குறையாதா? பண்டிகை காலத்தில் மக்களுக்கு ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரையின் மொத்த விற்பனை விலை, இந்திய சந்தையில் எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.. இது நாடு முழுவதிலும் அதிர்வலையையும் உண்டுபண்ணி வருகிறது. பண்டிகை காலம் ஆரம்பிக்கும் நேரத்தில் இப்படியொரு தகவல் பொதுமக்களை கலக்கத்திற்கு ஆளாக்கி வருகிறது.. சர்க்கரை விலை உயர்வுக்கு என்ன காரணம்? எப்போது விலை குறையும்? சர்க்கரை மார்க்கெட்டில் என்ன நடக்கிறது?

ஒரு பக்கம் நாட்டில் சர்க்கரையின் உற்பத்தி வழக்கமான தேவைக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. இன்னொரு பக்கம், சுமார் 8 லட்சம் டன் சர்க்கரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்ற ஷாக் தகவலும் வெளியாகியுள்ளது. இதன்காரணமாகவே உள்நாட்டில் கையிருப்பு குறைந்து, சர்க்கரை தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Sugar Prices Sugar Price Hike India Sugar Market Festive Season Sugar Export Business News

சர்க்கரை விலை உயர்வு

போதிய கையிருப்பு இல்லாத நிலையில், சர்க்கரையின் விலை இனி வரும் நாட்களில் மேலும் எகிறும் என்ற தகவல்தான், இப்போது பொதுமக்கள் தலையில் இடியாய் விழுந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், டெல்லியை சேர்ந்த முக்கிய வர்த்தக அமைப்புகள் மற்றும் சந்தை வல்லுநர்கள் அதற்கு மேல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்கள்.. அதாவது இப்போதுள்ள சர்க்கரை விலையேற்றம் தற்காலிகமானது கிடையாதாம், அடுத்து வரவிருக்கும் 3 மாதங்களுக்கும் இதே போன்ற உயர்ந்த நிலையிலேயே தொடரும் என்று கணித்து கூறுகிறார்கள்.

கோலாலம்பூர் மார்க்கெட்

குறிப்பாக நாட்டின் முதன்மை சர்க்கரை உற்பத்தி மையமாகத் திகழும் மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூரில், சர்க்கரை சந்தை இதுவரை பார்த்திராத மாற்றத்தை சந்தித்துள்ளது. அங்கு கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 100 கிலோ சர்க்கரையின் மொத்த விற்பனை விலை 10.20 சதவீதம் வரை உயர்ந்து, 4,716 ரூபாய் என்ற புதிய சாதனையை தொட்டுள்ளது.

விரைவில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி மற்றும் தீபாவளி போன்ற தொடர் பண்டிகைக் காலங்கள் வரப்போவதால், இந்த விலை உயர்வு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்..

பண்டிகை காலத்தில் ஷாக்

இந்த பண்டிகைக் காலத்தில்தான் இனிப்புகள், பலகாரங்களின் தயாரிப்பு பல மடங்கு அதிகரிக்கும்.. அதனால் சர்க்கரைக்கான தேவையும் சந்தையில் உச்சத்தை அடையும். எனவேதான் இந்த பண்டிகை காலத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைக்கின்றன சர்க்கரை ஆலைகள். இப்போது ஸ்டாக்கிலுள்ள சர்க்கரையை ஒரேடியாக மார்க்கெட்டுக் கொண்டு வந்துவிடாமல், கொஞ்சம் கொஞ்சமாக விநியோகிக்க அவை திட்டமிட்டுள்ளனவாம்.

உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை, 8 லட்சம் டன் ஏற்றுமதியால் ஏற்பட்ட கையிருப்பு சரிவு, பண்டிகைக் காலத் தேவையின் திடீர் அதிகரிப்பு , ஆலைகளின் விநியோகக் கட்டுப்பாடு இப்படி அனைத்துமே ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சந்தையில் மிகப்பெரிய புயலை கிளப்பி விட்டுள்ளன.

இதன் தாக்கம் கடைசியில், சில்லறை விற்பனை சந்தையிலும் எதிரொலித்து, பொதுமக்களின் தலையில்தான் விழப்போகிறது.. எப்படி பார்த்தாலும் வரப்போகும் 3 மாதங்களுக்கு சர்க்கரை மார்க்கெட் ரேட்டை கேட்க கசப்பாகத்தான் இருக்கும்போல...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+