இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு?
சென்னை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற பாஜக ஆலோசனை கூட்டத்தில் 27 வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த பட்டியல் பாஜக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கு ஒப்புதல் கிடைத்த பின் நாளை அல்லது நாளை மறுநாள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது.
சென்னையில் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

தொடர்ந்து மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, ராசிபுரம், ராமநாதபுரம், பத்மநாபபுரம், மானாமதுரை, குளச்சல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரத்தை எட்டவுள்ளது.
ஆனாலும் இதுவரை பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் பாஜக வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக சீனியர்களான நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து பாஜக சார்பாக தேர்தலில் களமிறங்கும் 27 பேரின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமை ஒப்புதல் கொடுத்த பின் நாளை அல்லது நாளை மறுநாள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. கடைசி நேரத்தில் ஒரு சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில் குழப்பம் நீடித்திருக்கிறது.
அது பியூஷ் கோயல் நடத்திய ஆலோசனைக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் தமிழக பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் அண்ணாமலை பெயர் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அண்ணாமலைக்கு சாதகமாக கரூர், கோவையில் பாஜகவுக்கு ஒரேயொரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்?












Click it and Unblock the Notifications