சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனக்கு 25, உனக்கு வெறும் 15தான்.. ஓகேவா.. அதிர வைக்கும் அதிமுக

அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு குறித்து ஓரளவு தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மொத்தம் 40... அதில் அதிமுகவுக்கு 25 தொகுதிகள், பாஜகவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரொம்ப ரொம்ப எதிர்பார்த்து, திடீரென பியூஷ் கோயல் சென்னை வந்து, ஓவர் நைட்டில் அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் ஆரம்பித்தது. விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தியும், ஒன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு சில எம்பி தொகுதிகள் தேவை என்பதால் பாஜக முதலில் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளது. இதற்கு அதிமுக எடுத்த எடுப்பிலேயே சம்மதம் சொல்லவில்லை. அதனால் தொகுதிகளை குறைத்து கேட்டு அடுத்த டிமாண்ட் வைக்க, அதற்கும் அதிமுக யோசித்தாகவும், கூறப்பட்டது,.

கூட்டணி கட்சிகள்

கூட்டணி கட்சிகள்

எப்படி பார்த்தாலும், அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதுவை என்.ஆர்.காங்கிரஸ், போன்ற கட்சிகள் இடம் பெறும் என ஓரளவு உறுதியாகியுள்ளது.

ஹாட் நியூஸ்

ஹாட் நியூஸ்

இப்போதைய ஹாட்நியூஸ் என்னவென்றால், நாற்பதில் அதிமுகவுக்கு 25 தொகுதிகள், பாஜகவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாம். இப்போது இதிலிருந்து இரு கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் என்றும் தெரிகிறது.

தேமுதிக-பாமக

தேமுதிக-பாமக

எப்படி பார்த்தாலும் பாஜக பக்கம்தான் பாமக, தேமுதிக சாயும் வாய்ப்பு அதிகம். அதனால் பாமகவுக்கு 4, தேமுதிகவுக்கு 3 என கொடுத்துவிட்டு மீதம் உள்ள தொகுதியில் பாஜக போட்டியிடும் என சொல்லப்படுகிறது.

5 தொகுதிகள்

5 தொகுதிகள்

எனினும், சென்னை, கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி, இந்த 5 தொகுதிகளில் பாஜக வலுவாக உள்ளதால் இந்த தொகுதிகள் ஏறக்குறைய அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கண்டிப்பாக இதனை கூட்டணிக்கு விட்டுத்தராது என்றும் தெரிகிறது.

கிட்டத்தட்ட உறுதி

கிட்டத்தட்ட உறுதி

அதேபோல, என்.ஆர்.காங்கிரஸ் புதுவைக்கு என்று கன்பார்ம் என்றும் தேமுதிகவுக்கு கடலூர், கள்ளக்குறிச்சி என்றும், அதேபோல, வடமாவட்டங்களில் பாமக வலுவாக இருப்பதால், அரக்கோணம், ஆரணி இரண்டும் கிட்டத்தட்ட உறுதி என்றும் போனஸ் தகவல்கள் வருகின்றன.

தொகுதி ஒதுக்கீடு

தொகுதி ஒதுக்கீடு

ஆனால் இன்னும் கூட்டணி, சீட் விவகாரம், தொகுதி ஒதுக்கீடு குறித்து கன்பார்ம் தகவல் எதுவும் வரவில்லை. ஏனென்றால், இன்னும் ஒரு ரவுண்டு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் அதிமுக-பாஜக தலைவர்கள் கலந்து பேசி, இறுதி முடிவை எடுத்து, இன்னும் இரண்டு நாட்களில் உறுதியாக அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.

English summary
BJP-ADMK seat sharing deal for the Election with 15-25
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X