டிடிஃஎப் வாசன் தைரியம் இருந்தால் பைக் ரேஸுக்கு என்னோட ஒன்டிக்கு ஒன்டி வாங்க! அலிஷா அப்துல்லா சவால்
சென்னை: யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் பைக் ரேஸுக்கு வர சொல்லுங்கள் என பாஜக நிர்வாகியும் கார், பைக் ரேசருமான அலிஷா அப்துல்லா சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அலிஷா அப்துல்லா கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: டிடிஎஃப் வாசனுக்கு 10 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்தது நல்ல செய்திதான். நான் பிரபஷனலாக பயிற்சி எடுத்தபோதிலும் எனக்கு உடலில் ஆங்காங்கே எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் டிடிஎஃப் வாசன் பிரபஷனலாக பயிற்சி பெற்றவர் இல்லை. காஞ்சிபுரத்தில் விபத்து நடக்கும் வரை எனக்கு வாசன் யாரென்றே தெரியாது. விபத்து நடந்து பெரிய விஷயமாக மாறிய போதுதான் அவருடைய வீடியோக்களை நான் பார்த்தேன். அதில் சீட்டில் நின்று கொண்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட தவறான விஷயங்களை செய்துள்ளார்.
இதனால் மட்டுமே அவருக்கு ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள். இந்த தவறை அவர் உணர வேண்டும். மீண்டும் அது போல் செய்யக் கூடாது. அவர் ஓட்டி வந்த பைக்கில் வீலிங் செய்யவே முடியாது. அந்த பைக் 1200 சிசி , உலகிலேயே அதிக எடை கொண்ட பைக் அது. 265 கிலோவுக்கு மேல் இருக்கும். 300 கி.மீ. வேகத்தில் செல்லும். அந்த பைக்கை வைத்துக் கொண்டு ரேசிங்கில் கூட வீலிங் செய்யவே முடியாது.
மக்களுக்கும் இளைஞர்களுக்கும் வாசன் தவறான முன்னுதாரணமாக இருக்கிறார். நானும் ஒரு ரேசர் என்பதால் டிடிஎஃப் வாசன் செய்தது சரியா தவறா என்பது எனக்கு தெரியும். நான் 8 வயது முதல் பைக் ரேசிங்கில் இருக்கிறேன். ஆனால் அவர் செய்யும் தவறை நியாயப்படுத்துவதுதான் வேதனையாக இருக்கிறது. நான் எனது வீடியோவில் டிடிஎஃப் வாசனுக்கு அறிவுரை வழங்கவில்லை.
தயவு செய்து இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் சப்போர்ட் செய்யாதீர்கள் என்றுதான் நான் கூறினேன். இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கிறார். டிடிஎஃப் வாசன் பைக் ரேசர் கிடையாது. அவர் ஒரு பயிற்சி பெறாத ஸ்டன்டர். பொழுதுபோக்காளர். ஸ்டன்ட் செய்வதற்கு என தனி இடம் இருக்கும். சாலைகளில் எல்லாம் ஸ்டன்ட் செய்ய கூடாது. இதை பயிற்சி பெற்றவர்களே செய்ய மாட்டார்கள்.

எனக்கு வாசன் மீது மரியாதை எல்லாம் கிடையாது. இனி பைக் குறித்தும் கார் குறித்தும் மட்டுமே அவரால் யூடியூபில் பேச முடியும். இனி ஸ்டன்ட் எல்லாம் செய்ய முடியாது. அவர் இங்கு சென்னை ரேஸ் கிளப்பில் வந்து ஓட்ட சொல்லுங்கள், பாதி அளவுக்கூட போக முடியாது. வாசன் இப்போதுதான் ஜெயிலுக்கு போய்ட்டு வந்திருக்காரு. அவருக்கு மூளை இல்லை, சட்டமும் தெரியவில்லை. அவருக்கு மீடியாக்கள் அட்டன்ஷன் கொடுக்கக் கூடாது.
தவறான செயல்களால் பாலோயர்கள் இருப்பது எல்லாம் ஒரு சாதனையா? 10 ஆண்டுகளுக்கு மட்டும் இல்லை. அவருக்கு வாழ்நாள் முழுவதும் இரு சக்கர வாகன லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும். வாசன் சொல்வது போல் சர்வதேச லைசன்ஸை வைத்துக் கொண்டு இந்தியாவில் வாகனம் ஓட்ட முடியாது. ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துவிட்டால் இந்தியா முழுவதும் வாகனம் ஓட்ட கூடாது.
அவர் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை கொண்டு வாகனம் ஓட்டினால் அவர் மீது நான் கேஸ் போடுவேன். வாசனை பைக் ரேசர் என சொல்லி பைக் ரேசர்களை அவமானப்படுத்தாதீர்கள். வாசன் எந்த பைக்கை வேண்டுமானாலும் இந்த டிராக்கிற்கு எடுத்து வரட்டும். என்னுடன் ரேஸுக்கு வரட்டும். நான் சவால் விடுகிறேன். நிச்சயம் அவரால் ஓட்ட முடியாது. அவரால் பைக்கை வைத்துக் கொண்டு சீன்தான் போட முடியும். பைக் ஓட்ட முடியாது. பைக் ரேசர்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். வாசன் ஒரு ஜோக்கர் , எனவே அவரை பைக் ரேசர்களுடன் கம்பேர் செய்யாதீர்கள்.
இதன் பிறகு வாசனுக்கு பாலோயர்ஸ்கள் இருக்க மாட்டார்கள். அப்படி இருந்தால் அவர்களுக்கும் மூளை இல்லை. டிடிஎஃப் வாசன் பாதுகாப்பு அம்சங்களுடன் ஓட்டினாலும் அவருக்கு பாதிப்பு இல்லை, ஆனால் சாலையில் செல்லும் மக்களுக்கு நிறைய பாதிப்பு இருக்கிறது. எனவே வாசனை ஆரம்பத்திலேயே அவருடைய பெற்றோர் கண்டித்திருக்க வேண்டும். ஜெயில் வாசல்ல போய் பெத்தவங்க போலீஸ், ஜெயிலுனு அலைய வைக்காதீங்கன்னு இப்ப சொல்லி என்ன பிரயோஜனம் இருக்கு? இவ்வாறு அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications