அதிமுகவின் அடிமடியில் அடித்த பாஜக! தமிழ்நாட்டில் அந்த 12 தொகுதிகளில் பாஜக சாதனை! கலக்கிட்டாங்களே
சென்னை: தமிழ்நாட்டில் 12 தொகுதிகளில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி அதிமுகவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. திமுக கூட்டணி 40 இடங்களிலும் வென்று அசத்தி உள்ளது.

வரிசையாக 10 தோல்வி; அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
டெபாசிட் போச்சு: இதில் தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.
9 தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும், 3 தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் 12 தொகுதிகளில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி அதிமுகவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.
பாஜக இரண்டாம் இடம்; 12 தொகுதிகளில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி இரண்டாம் பிடித்து உள்ளது.
சென்னை மத்திய தொகுதி- வினோஜ் - 169159 வாக்குகள் பெற்றார்
சென்னை தெற்கு தொகுதி- தமிழிசை- 290683 வாக்குகள் பெற்றார்
கோவை தொகுதி- அண்ணாமலை - 450132 வாக்குகள் பெற்றார்
குமரி தொகுதி- பொன்னார் - 366341 வாக்குகள் பெற்றார்
மதுரை தொகுதி- ராம சீனிவாசன் - 220914 வாக்குகள் பெற்றார்
நீலகிரி தொகுதி- எல் முருகன் - 232627 வாக்குகள் பெற்றார்
நெல்லை தொகுதி- நயினார் நாகேந்திரன் - 336676 வாக்குகள் பெற்றார்
திருவள்ளூர் தொகுதி- பாலகணபதி - 224801 வாக்குகள் பெற்றார்
வேலூர் தொகுதி - ஏசி சண்முகம் - 352990 வாக்குகள் பெற்றார்
கூட்டணி கட்சிகள் இரண்டாம் இடம் பிடித்த இடங்கள்
தேனி தொகுதி - டிடிவி - 292668 வாக்குகள் பெற்றார்
தருமபுரி தொகுதி - பாஜக கூட்டணி - சௌமியா - 411367 வாக்குகள் பெற்றார்
ராமநாதபுரம் தொகுதி - ஓபிஎஸ் - 342882வாக்குகள் பெற்றார்
அதிமுகவை இந்த 12 தொகுதிகளில் பாஜக பின்னுக்கு தள்ளி உள்ளது.
வாக்கு சதவிகிதம்:
2024 தேர்தலுக்கான இறுதி தமிழ்நாடு வாக்குப் பகிர்வு.
திமுக+ : 46.97 %
அதிமுக +: 23.05 %
பாஜக +. : 18.28 %
நாம் தமிழர் : 8.10 %
மற்றவைகள். : 2.66 %
நோட்டா : 1.07 ஆகியவை ஆகும்.












Click it and Unblock the Notifications