என்னது வாக்கு சதவீதமா? ஏங்க நீங்க 21 தொகுதியில் டெபாசிட்டே வாங்கலயே! டேட்டாவோடு வந்த திமுக ஐடி விங்!
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாக பாஜகவினர் கூறி வந்தாலும் அக்கட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருப்பதாக விமர்சிக்கின்றனர் திமுகவினர். குறிப்பாக 21 தொகுதிகளில் பாஜக கூட்டணி தனது டெபாசிட்டை இழந்திருப்பதாக கூறி இருக்கிறது திமுக ஐடி விங்.
2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக கூட்டணி பெருவெற்றி பெற்றிருக்கிறது. அந்த கூட்டணி 40க்கு 40 என தமிழகம் புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது

இந்த கூட்டணி தவிர்த்து.. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை மக்களவைத் தேர்தலில் களம் கண்டன. இந்த இரண்டு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சியுமே தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகத்தில் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை என்றாலும் , நல்ல வாக்கு வங்கியை வாங்கியிருக்கிறது. பல தொகுதிகளில் பாஜக, பாமக, அமமுக, ஓபிஎஸ் வேட்பாளர்கள் நல்ல வாக்குகளை பெற்று 2வது இடத்தில் வந்துள்ளனர் என பாஜகவினர் கூறுகின்றனர். தமிழகத்தில் முழுமையாக திமுக கூட்டணி தமிழக எதிர்க் கட்சிகளை தோல்வியடையச் செய்திருக்கிறது.

இந்த நிலையில் தாங்கள் தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறோம் கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது என அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினர் கூறி வருகின்றனர். குறிப்பாக தற்போதைய சூழலில் திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்கும் அடுத்து தமிழகத்தில் அதிக வாக்கு சதவீதம் கொண்ட கட்சியாக பாஜக இருக்கிறது.. இந்த மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கின்றனர் என பாஜகவினர் பேசி வருகின்றனர். அந்த கட்சியின் வாக்கு சதவீதம் 11.24 ஆக இருக்கிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் வெறும் 3.62 என்பதும் 2014ல் 5.56 என கணக்கு கூறி வருகின்றனர். ஆனால் பாமகவின் வாக்குகள் தான் பாஜகவை காப்பாற்றி இருக்கிறது என பாமகவினரும், திருமாவளவன் உள்ளிட்டோரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாக பாஜகவினர் கூறி வந்தாலும் அக்கட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருப்பதாக விமர்சிக்கின்றனர் திமுகவினர். குறிப்பாக 21 தொகுதிகளில் பாஜக கூட்டணி தனது டெபாசிட்டை இழந்திருப்பதாக கூறி இருக்கிறது திமுக ஐடி விங்.
இது தொடர்பாக அக்கட்சி ஐடி விங் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, வடசென்னை, சிதம்பரம், கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விருதுநகர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, சேலம், விழுப்புரம், ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, திருச்சி பெரம்பலூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டையும் பறி கொடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த டேட்டாவை வைத்து மீம்ஸும் பகிரப்பட்டுள்ளது. அதனை தங்கள் சமூக வலைதளங்களில் திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications