பாஜகவிற்கு சிம்ம சொப்பனம் ஆகும் தென்னிந்தியா? இவ்வளவு சீட்தான் வாங்குமா? வெளியான கருத்து கணிப்பு
சென்னை: தென்னிந்தியாவில் பாஜக மிக குறைவான எண்ணிக்கையில்தான் வெற்றிபெறும் என்று லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் கட்சியின் நிலை குறித்தும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் லோக்பால் என்ற பிரபல கருத்து கணிப்பு நிறுவனம் தமிழ்நாடு அரசியல் நிலவரத்தை கணித்துள்ளது. அதில்,
மொத்த இடங்கள் 39
▪️திமுக கூட்டணி 34 - 37 இடங்களை வெல்லும்
▪️அதிமுக கூட்டணி 1 - 3 இடங்களை வெல்லும்
▪️பாஜக கூட்டணி 0 - 1 இடங்களை வெல்லும்
▪️மற்றவை 0 - 1 இடங்களை வெல்லும்
தமிழ்நாட்டில் திமுகதான் பெரும்பான்மை இடங்களை வெல்லும் என்று இந்த கணிப்புகள் உறுதி செய்கின்றன.
புதுச்சேரியில் நிலவரம்: புதுச்சேரி, அந்தமான், லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில்
▪️இந்தியா கூட்டணி 1 - 2 இடங்களை வெல்லும்
▪️பாஜக கூட்டணி 0 - 1 இடங்களை வெல்லும்
தென்னிந்தியா நிலவரம்: மொத்தமாக தென்னிந்தியாவில்,
Total Seat 132
▪️இந்தியா கூட்டணி 78 - 82 இடங்களை வெல்லும்
▪️பாஜக கூட்டணி 28 - 34 இடங்களை வெல்லும்
▪️YSRCP 10 - 11 இடங்களை வெல்லும்
▪️அதிமுக 1 - 3 இடங்களை வெல்லும்
▪️மற்றவர்கள் 1 - 3 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்னொரு கணிப்பு: இது போக அக்னி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் சார்பாக இன்னொரு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பிரபல கருத்து கணிப்பு நிறுவனமான சி வோட்டர் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருந்த சுரேஷ் குமார் என்பவர் மூலம் அக்னி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் சார்பாக தென்னிந்தியா தொடர்பான இன்னொரு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த கருத்து கணிப்பில், மொத்த இடங்கள் 132
பாஜகவின் NDA கூட்டணி பெறும் இடங்கள்
கர்நாடக பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி 9 இடங்கள்
ஆந்திரப் பிரதேசம் - டிடிபி - பாஜக - ஜேஎஸ்பி 13 இடங்கள்
தெலுங்கானா பாஜக கூட்டணி - 2 இடங்கள்
மொத்தமாக தென்னிந்தியாவில் பாஜக பெறும் இடங்கள்: 24 இடங்கள்
காங்கிரஸ் - இந்தியா கூட்டணி
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி - 20 இடங்கள்
தமிழ்நாடு திமுக காங்கிரஸ் கூட்டணி - 39 இடங்கள்
கர்நாடகா காங்கிரஸ் கூட்டணி - 19 இடங்கள்
ஆந்திரப் பிரதேசம் காங்கிரஸ் கூட்டணி - 2 இடங்கள்
தெலுங்கானா காங்கிரஸ் கூட்டணி - 12 இடங்கள்
புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணி - 1 இடம்
அந்தமான் & நிக்கோபார் காங்கிரஸ் கூட்டணி - 1 இடம்
லட்சத்தீவு காங்கிரஸ் கூட்டணி பெறும் இடங்கள்: - 1 இடம்
மொத்தம் தென்னிந்தியாவில் காங்கிரஸ் கூட்டணி பெறும் இடங்கள் : 95 இடங்கள்
ஒய்எஸ்ஆர்சிபி - 10 இடங்கள்
பிஆர்எஸ் - 2 இடங்கள்
ஏஐஎம்ஐஎம் - 1 இடம் வெல்லும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications