டெல்லி டீலிங் டன்? கொள்கை எதிரி பாஜகவோடு சேரும் தவெக விஜய்? கடைசியில் திமுகவிற்குத்தான் சாதகம்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் பாஜகவோடு கூட்டணி வைக்க போவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்து உள்ளன.கொள்கை எதிரி பாஜக என்று விஜய் கூறி வந்த நிலையில், கரூர் விவகாரத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க விஜய் திட்டம் போட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் கூட்டணிக்கு வாருங்கள்.. வழக்குகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று விஜயிடம் டெல்லி தரப்பு கூறி உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அடுத்து என்ன முடிவுகளை எடுக்கலாம் என்று விஜய் ஆலோசனைகளை செய்து வருகிறாராம். தமிழக வெற்றிக் கழகம் ஒருவேளை பாஜகவோடு கூட்டணி வைத்தால் அது அரசியல் வட்டாரங்களில், தேர்தல் களத்தில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

1. ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் உள்ள அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கு இது எதிராக திரும்பும். கூட்டணியில் அவருக்கான முக்கியத்துவம் குறையும். ஆனால் அவர் முதல்வர் வேட்பாளராகவே தொடர்வார்.
2. அதே சமயம் விஜயுடன் அவர் பதவியை பகிர வேண்டி இருக்கும். அதாவது விஜய் துணை முதல்வர் பதவி கேட்கலாம். இது பொதுவாக அதிகாரத்தை பகிர விரும்பாத எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலாக மாறும்.
3. இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி - பாஜக கூட்டணி தேர்தலில் வெற்றிபெற இது வழிவகுக்கும். அதாவது திமுகவிற்கு எதிரான வாக்குகள் பிரியாது. எதிர்க்கட்சி வாக்குகள் எல்லாம் ஒன்றாக இணையும். திமுகவிற்கு எதிர் வாக்குகள் மொத்தமாக ஒரு இடத்தில் குவியும்.
4. ஆனால் இன்னொரு பக்கம் திமுகவிற்கும் இது சாதகமாக அமையும். உதாரணமாக சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தமாக திமுக பக்கம் வரும்.
5. திமுக மீது அப்செட்டாக இருக்கும் ஒரு சில இஸ்லாமியர்கள் , முக்கியமாக கிறிஸ்துவர்கள் அப்படியே விஜய் பக்கம் போகும் சூழல் இருந்தது. இந்த சூழல் மாறும். இவர்கள் மீண்டும் அப்படியே திமுக பக்கம் வருவார்கள். திமுகதான் சரி என்று வருவார்கள். ஏனென்றால் பாஜக கூட்டணிக்கு அவர்கள் வாக்களிக்கவே மாட்டார்கள்.
6. திமுகவிற்கு எதிர்கால அரசியல் ரீதியாக இது ஆதரவாக மாறலாம். மாற்று அரசியல் என்று பேசிய விஜய் கூட்டணி அரசியலுக்குள் சென்றுவிட்டார் என்ற வாதத்தை திமுக வைக்க முடியும் . இது விஜய்யின் அரசியல் திட்டங்களுக்கு பெரிய ஆபத்தாக மாறும்.
எத்தனை இடங்கள்?
மொத்தமாக விஜய்க்கு 50+ இடங்களை கொடுக்க பாஜக முடிவெடுத்து உள்ளதாம். தமிழக வெற்றிக் கழகம் - பாஜக - அதிமுக இடையே இந்த கூட்டணி அமைக்கப்படும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். ஏற்கனவே பாஜக கூட்டணியில் அதிமுக உள்ளது. அதிமுகவிற்கு முதல்வர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா அடித்து சொல்லிவிட்டார். அதேபோல் நயினார் நாகேந்திரனும் அடித்து சொல்லிவிட்டார். பாஜக கூட்டணியில் இருந்த ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வெளியேறிவிட்டார்கள். இதனால் கூட்டணி வலிமையின்றி இருக்கிறது. கூட்டணியை வலிமைப்படுத்தி தமிழக வெற்றிக்கழகம் வந்தால் மட்டுமே சரியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications