முதல்வர்தான்.. ஆனா கும்மிடிப்பூண்டியை தாண்டினா.. ஸ்டாலினை யாருக்கும் தெரியாது.. பாஜக தாக்கு
சென்னை: கும்மிடிப்பூண்டி தாண்டினா ஸ்டாலினை யாருக்கு தெரியும்? என பாஜக இளைஞரணித் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டி வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டியை தொடங்கி வைக்க வருமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் நாளை இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை தரவுள்ளார்.

உற்சாக வரவேற்பு
அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒலிம்பிக் போட்டி தொடர்பான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியை தமிழகத்திற்கு கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான். அவ்வாறிருக்கையில் அவர் புகைப்படமோ பெயரோ தமிழக அரசு விளம்பரங்களில் இடம்பெறவில்லை.

பாஜக கண்டனம்
இதை பாஜகவினர் கண்டித்து வருகிறார்கள். மேலும் திட்டமிட்டு பிரதமரின் பெயரை தமிழக அரசு இருட்டடிப்பு செய்துள்ளது என குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படத்தை ஒட்டும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அமர்பிரசாத் ரெட்டி
பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் அணி தலைவர் அமர்பிரசாத் ரெட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள தமிழக அரசு விளம்பரப் பலகைகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டினார். மேலும் இதுகுறித்து அவர் வீடியோ மூலம் பாஜகவினருக்கு கூறுகையில் மத்திய அரசின் ஏற்பாட்டின் பேரில்தான் இந்த செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடக்கிறது.

முதல்வருக்கு மட்டும் விளம்பரம்
ஆனால் முழுக்க முழுக்க முதல்வருக்கு மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அவர் முதல்வர்தான். ஆனால் கும்மிடிப்பூண்டி தாண்டினால் அவரை யாருக்குமே தெரியாது. இது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி. மாநில செஸ் போட்டி அல்ல. ஏதோ திமுக நிகழ்ச்சி போல் பிரதமரின் பெயரை போடாமல் விட்டுவிட்டார்கள்.

வெளிநாடு
வெளிநாட்டில் இருந்து ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள், சுற்றுலா பயணிகள் வந்துள்ளார்கள். அவர்களுக்கு விளம்பர படத்தில் உள்ள ஸ்டாலினை யாரென்றே தெரியாது. பிரதமர் மோடியைத்தான் தெரியும். எனவே ஒலிம்பியாட் விளம்பரங்களில் மோடியின் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என அமர்பிரசாத் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications