முதல்வர் வேட்பாளர் யார்? அதெல்லாம் டெல்லிதான் முடிவு செய்யும்.. உங்களுக்கே தெரியும்! எடப்பாடி பதில்
சென்னை: முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு வந்து டெல்லி எடுக்கிற முடிவுதான்.. அது உங்களுக்கே தெரியும். உங்கள் எல்லோருக்குமே தெரியும்.. டெல்லி இதில் எடுக்கும் முடிவுதான் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று இது தொடர்பாக பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றாலே அனைவருக்கும் தெரியும் 2014, 2019 இல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போதும் கூட கூட்டணி கட்சிகளை எல்லாம் இணைத்தே அமைச்சரவையை அமைத்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றால் அது கூட்டணி அமைச்சரவை தான் என்பது எனது புரிதல்.

முதல்வர் வேட்பாளர் யார் என்று கூட்டணியினர் சேர்ந்து முடிவெடுப்பார்கள். 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பதிலடி
இந்த நிலையில் தினகரனின் இந்த பேச்சு தொடர்பான கேள்விக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில், அமித் ஷா சென்னைக்கு வந்த போதே இதை பற்றி தெளிவாக சொல்லிவிட்டார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அதோடு இதற்கு நாங்கள்தான் தலைமை தங்குவோம் என்பதும் உறுதியாகிவிட்டது.
அதோடு இல்லாமல் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமிதான் இருப்பார் துன்று அமித் ஷாவே அறிவித்துவிட்ட்டார். எங்கள் கூட்டணி அதிமுக தலைமையில் அமையும். நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
அதாவது முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு வந்து டெல்லி எடுக்கிற முடிவுதான்.. அது உங்களுக்கே தெரியும். உங்கள் எல்லோருக்குமே தெரியும்.. டெல்லி இதில் எடுக்கும் முடிவுதான் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியபடிதான்.. அதை தாண்டி யார் பேசினாலும் அது சரியில்லை.. அமைச்சர் பேச்சை தாண்டி யார் என்ன சொன்னாலும் அது சரி கிடையாது என்பதுதான் என் கருத்து, என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
அமித் ஷா சொன்னது என்ன?
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாகடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது. ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை விவகாரத்தை எழுப்பி திமுக திசை திருப்புகிறது; வரும் தேர்தலில் திமுக ஊழல், பட்டியலின மக்கள், மகளிர் வன்கொடுமை போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.
ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்சனையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்சனைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது திமுக. சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் கூட்டணி குறித்து அதிமுக எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை.
இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம்; கூட்டணி ஆட்சிதான் நடக்கும் தீ எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமைகிறது; வெற்றிக்குப் பிறகு மற்றவை முடிவு செய்யப்படும். ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது திமுக. எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக உடன் கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது., என்றது குறிப்பிடத்தக்கது.
-
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications