இமேஜை உடைத்து.. எம்பி.க்களை வளைத்து.. திமுகவை நிலைகுலைய வைக்க டெல்லி செம திட்டம்!
திமுக எம்பிக்களை பாஜக வளைத்து போட முயற்சிப்பதாக தெரிகிறது
சென்னை: திமுக எம்பிக்களை இழுத்து போடும் வேலையில் பாஜக தீவிரமாக இறங்கி உள்ள விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மொத்தம் 37 பேர் லம்ப்பாக டெல்லிக்கு வந்ததும் பாஜக தலைமையால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. எவ்வளவோ நெருக்கடிகள் தந்தும், பாஜகவுக்கு திமுகவும் ஈடு கொடுத்துதான் வருகிறது.
வெளிப்படையாக சொல்லப்போனால், திமுகவுக்கு நேர் எதிரி இப்போதைக்கு பாஜகதான் என்றும் ஆகிவிட்டது. அது மட்டுமில்லை.. தமிழகத்தில் காலூன்ற பாஜகவுக்கு தடையாக இருப்பதும் திமுகதான் என்ற எண்ணமும் உள்ளது. அதனால் திமுகவின் செல்வாக்கை உடைக்க வியூகங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பின்னணி
அதன்படி, திமுக எம்பிக்களை குறி வைத்து அவர்களின் இமேஜை உடைப்பது என்பது.. மற்றொன்று, முக்கிய எம்பிக்களை வளைத்து போட்டு கொள்வது.. இந்த இரண்டு விஷயத்தையும் பாஜக கையில் எடுக்கவே செய்யும் என்பது திமுக நன்றாகவே அறிந்திருக்கிறது. அதனால்தான் 37 திமுக எம்பிக்கள் பற்றிய பின்னணி நிலவர விளக்கத்தை பாஜக கேட்டதாகவும் ஒரு செய்தி பரவியது.

அறிவுறுத்தல்
இதெல்லாம் தெரிந்ததால்தானோ என்னவோ, இது சம்பந்தமாக 2 முறை திமுக எம்பிக்கள் கூட்டம் நடத்தியது, அதில், டெல்லி விஷயத்தில் நாம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது உட்பட துரைமுருகன் நிறைய அறிவுறுத்தல்களையும் வழங்கியதாக கூறப்பட்டது. முக்கியமாக, தொகுதி மேம்பாட்டு நிதியை மிக சரியாக செலவிட வேண்டும் என்பதுதான் சீரியஸான அட்வைஸாக இருந்ததாம்.

பலவீனம்
இப்போதும்கூட, திமுக எம்பிக்களை புரோக்கர்களை வைத்து பாஜக வளைத்து போட முயல்கிறதா, அல்லது திமுக எம்பிக்களின் பலவீனம், வழக்கு பின்னணிகளை வைத்து கிண்டி கிளறி டேமேஜ் செய்ய போகிறதா என்பது இதுவரை பிடிபடவில்லை. எப்படி இருந்தாலும் சரி, எந்நேரமும் திமுக அலர்ட்டாகவே இருப்பதாக தெரிகிறது.

தாமரை
"நாட்டில் எந்த மாநிலத்திலும் காலூன்ற முடிகிறது.. இந்த கேரளா, தமிழ்நாட்டில் மட்டும் தாமரையை மலர வைக்க முடியவில்லையே" என்பதுதான் பாஜக தலைமையின் புலம்பலாக உள்ளதாக கூறப்படுகிறது.
-
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக்












Click it and Unblock the Notifications