"சாமி"யா?.. நமச்சிவாயமா?.. பாஜகவின் பிடிவாதம்.. கெத்து காட்டும் என்.ஆர். காங்... பரிதாப மக்கள்!

புதுச்சேரியில் தொற்று அதிகமாக பரவி கொண்டிருக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவும், என்ஆர் காங்கிரசும், பதவி பிரச்சனையில் முட்டி மோதி கொண்டிருப்பால், புதுச்சேரி மக்கள் அம்போவென உட்கார்ந்துள்ளனர்.. அங்கு தொற்று ஏடாகூடமாக பரவி கொண்டிருக்கிறது..!

தமிழ்நாட்டுக்கும், பாண்டிச்சேரிக்கும் ஒன்றாகத்தான் தேர்தல் நடந்து, ரிசல்ட்டும் ஒன்றாகவே வந்தது.. இதையடுத்து, ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்..

அத்துடன் கொரோனா தடுப்பு பணிகளிலும் முழுமையாக களமிறங்கி விட்டார். தமிழகத்தில் அதிரடியாக லாக்டவுனை போட்டு, அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை தொற்று தடுப்பு பணியில் இறக்கி விட்டுள்ளார்.

 புகைச்சல்

புகைச்சல்

ஆனால், புதுவையில், இன்னும் யார் அமைச்சர்கள் என்றே தெரியவில்லை.. பதவி ஏற்றதுமே ரங்கசாமி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டார்.. அவர் டிஸ்சார்ஜ் ஆகி வருவதற்குள் பாஜக, உள்ளே புகுந்து நியமன எம்எல்ஏக்களை அமர்த்தி, அது பெரும் புகைச்சலை தந்துவிட்டது.

 கறார்

கறார்

ரங்கசாமி டிஸ்சார்ஜ் ஆகி வந்தும் பிரச்சனை தீரவில்லை.. துணை முதல்வர் பதவி தந்தே ஆக வேண்டும் என பாஜக எம்எல்ஏ நமச்சிவாயம் பிடிவாதம் பிடிக்கிறார்.. அதற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று ரங்கசாமி கறாராக சொல்லி வருகிறார்.. மேலும் பாஜக கேட்ட அமைச்சர் பதவியையும் ஒதுக்க ரங்கசாமி விரும்பவில்லை.

 டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை.. ரங்கசாமி டிஸ்சார்ஜ் ஆகி வந்ததும், எல்லாம் சரியாகிவிடும் என்று பாஜக அறிக்கை விட்டு தெரிவித்து வந்தது.. ஆனால், இவர்கள் இரு தரப்புமே தங்கள் பிடிவாதத்தை தளர்த்தி கொள்ளவில்லை. இதனால் அரசு எந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது.. மற்றொரு புறம் தினமும் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது... அங்கு கொரோனா பாதிப்பு 1,00,677 பேரை தாண்டி மிரள வைக்கிறது..

தொற்று

தொற்று

இதுவரைக்கும் 1,455 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.. ஆனாலும், பாஜகவும் - என்ஆர் காங்கிரசும் ஒரு சுமூக முடிவுக்கு வராமல் உள்ளனர்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டு, அந்த மக்களையே கவனிக்காத சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.. இந்த சண்டை எப்போது நீங்கி, எப்போது இவர்களுக்குள் இணக்கமாகி, எப்போது அமைச்சரவை அமைந்து, எப்போது மக்களை கவனிக்க போகிறார்களோ தெரியவில்லை..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+