Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஐஜி விஜயகுமார் தற்கொலை.. கடைசியாக யாருடன் பேசினார்?.. சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை சரக டிஐஜி தற்கொலை செய்வதற்கு முன்பாக யாருடன் பேசினார் என்று விரிவான விசாரணை செய்யப்பட வேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நீதிபதியின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் ஐ.பி.எஸ் இன்று காலை 6.45 மணியளவில் வழக்கம் போல டிஐஜி விஜயகுமார் நடைபயிற்சி மேற்கொண்டு பின்னர் கேம்ப் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அதன் பிறகு தனது பாதுகாப்பு அதிகாரியிடம் துப்பாக்கியை பெற்றுக்கொண்டு அவரது அறைக்கு சென்ற விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

BJP Annamalai asks to be investigated by Special Investigation Team for DIG Vijayakumars suicide

2009 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான விஜயகுமார் காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றுள்ள விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டு பணிப்புரிந்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததால் உயரதிகாரிகள் மூலம் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விஜயகுமாருடன் கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஐயகுமாரின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விஜயகுமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் விஜயகுமாருக்கு மரணத்திற்கு விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார். எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, விஜயகுமார் மரணத்திற்கு காரணம் ஆயிரம் இருந்தாலும் முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன. காவல்துறையில் பணியில் நிறைய மன அழுத்தங்கள் உள்ளன. தமிழகத்தில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதிகாரிகளுக்கு உச்ச பட்ச மன அழுத்தம் உள்ளது.
காவல்துறையினருக்கு வாரம் ஒருநாள் கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும்.

வேலைப்பளு அதிகம் இருக்கும். குடும்பம் ஓரிடத்திலும் அதிகாரிகள் ஓரிடத்திலும் பணியாற்றுவார்கள். அதுவே மனஅழுத்தத்திற்கு ஒரு காரணமாக இருக்கும். காவல்துறையில் நிறைய சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் அதிகாரி நேர்மையான அதிகாரி சிறப்பாக பணியாற்றியவர். அவர் காலையில் வாக்கிங் சென்று விட்டு வந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் யாரிடம் பேசினார்? என்பது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும். விஜயகுமார் மரணம் தற்கொலையாக இருந்தாலும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

விஜயகுமார் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு குரூப் ஏ பணி வழங்க வேண்டும். மறைந்த விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+