சென்னை திமுகவின் கோட்டையாம்.. அதில்தான் பாஜக ஓட்டை போடுதே.. அண்ணாமலை கலகல!
சென்னை: சென்னை திமுகவின் கோட்டை என்றார்கள், அதில் பாஜக ஓட்டை போட்டுக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Recommended Video
சென்னையில் பாஜக 200 வார்டுகளில் 198 வார்டுகளில் போட்டியிடுகிறது. மணலி சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் பாஜக வேட்பாளர் கோ.தனசேகரன், டிஏடி குமரன், சுரேஷ், பிரபு தாஸ், விஜயகுமார் ஆகியோரை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்த வேன் மூலம் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது : 505 தேர்தல் அறிக்கைகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, தேர்தல் அறிக்கைகளில் கூறியவற்றை நிறைவேற்றவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் நேரடிப் பிரச்சாரம் செய்ய முதல்வருக்கு தைரியம் இல்லை. நீங்கள் (மக்கள்) வாக்குறுதிகள் என்னாச்சு என கேட்பீர்கள் என்ற பயத்தால் காணொலி காட்சி மூலம் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திமுகவுக்கு கரும்புள்ளி
திமுகவிற்கு ஒரு கரும்புள்ளி வைக்க வேண்டும் சென்னை திமுகவின் கோட்டை என்பார்கள். அந்த கோட்டையில் பாஜக ஓட்டை போட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் (மக்கள்) அவர்களுக்கு செக் வைத்தால் அவர்கள் தேர்தல் அறிக்கை படி உங்களுக்கு உடனே ஆயிரம் ரூபாய் பணம் தருவார்கள். நகை கடன் தள்ளுபடி செய்வார்கள். அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள்.

ஆட்சி மாற்றம்
இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. மக்கள் சேவைக்கான ஒரு தேர்தல். 95 சதவீதம் பேருக்கு நோய் தடுப்பு ஊசி போட்டு இன்று நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் பிரதமர் மோடி. ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்ட ஊசி பல்வேறு விமானப்படை விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு இன்று நம் வீட்டுக்கே வந்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி
இதற்கு தமிழக மக்கள் நன்றி சொல்ல வேண்டாமா? அந்த நன்றிக்காக நீங்கள் பாஜகவிற்கு வாக்களியுங்கள். சென்னை இப்போது ஒரு மோசமான நிலையில் உள்ளது. மத்திய அரசு ஏராளமான திட்டங்களுக்காக நிதி ஒதுக்குகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பணம் ஒதுக்கினார்கள். ஆனால் அந்த பணம் என்ன ஆனது. 70 ஆண்டுகளாக சென்னை மிக மோசமான நிலையில் உள்ளது.

மழை வெள்ளம்
ஒவ்வொரு மழைக்கும் பொதுமக்கள் வேட்டி புடவையை தூக்கி கொண்டு நடக்க வேண்டிய ஒரு சூழல் உள்ளது. நீங்கள் பாஜகவிற்கு வாக்களிக்கும் போது மத்திய அரசு தரும் பணம் கடைசி மனிதனுக்கும் சென்று சேரும் வகையில் அவர்கள் ஈடுபடுவார்கள். பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று மாமான்றத்திற்கு சென்றால் அவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்றார். பிரச்சாரத்தின் போது 20-ஆவது வார்டில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் வேம்படையான் அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு அண்ணாமலை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம்












Click it and Unblock the Notifications