இந்த ஆணவம் திமுகவின் பிறவி குணம்.. ஸ்டாலினிடம் பெண் கேட்ட கேள்வி.. வீடியோ போட்டு விமர்சித்த அண்ணாமலை
சென்னை: "இந்த ஆணவம் திமுகவின் பிறவி குணம்" என ஸ்டாலின் வாக்கு சேகரித்த வீடியோ காட்சியை பகிர்ந்து விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஈரோடு சின்னிம்பாளைம் பகுதியில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஈரோடு, கரூர், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

நேற்று இரவு சேலம் பெத்தநாயக்கம் பாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார் ஸ்டாலின். இதனிடையே இன்று காலையில் சம்பத்நகர் பகுதியிலுள்ள உழவர்சந்தை பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சியை மேற்கொண்டார். அப்போது நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நாடாளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷ் ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்.
ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு: மேலும் உழவர் சந்தையில் இயங்கி வரும் கடைகளில் வியாபாரிகளிடம் காய்கறிகளின் விலையை கேட்டறிந்து, அவர்களிடம் வாக்குகள் சேகரித்தார். மேலும் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது பெண்கள், குழந்தைகள் முதல்வர் ஸ்டாலின் கை குலுக்கினர், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், உழவர் சந்தை அருகே நடைபாதையில் கடை போட்டிருந்த வியாபாரிகளிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
காய்கறி விற்கும் பெண்மணி கேள்வி: அப்போது காய்கறி விற்கும் பெண்மணி ஒருவர் தான் இரண்டு முறை கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தும் தனது விண்ணப்பம் நிராகரிப்பட்டதாகவும், 1000 ரூபாய் தனக்கு கிடைக்கவில்லை என்றும் முறையிட்டார். ஓட்டுரிமை உள்ள எனக்கு மகளிர் உரிமை தொகை பெற தகுதியில்லை எனச் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் காரணம் இல்லாமல் நிராகரிக்க வாய்ப்பு இல்லை, ஏதோ ஒரு காரணம் இருக்கும் என கூறினார். அப்போது தான் ஒரு அரசு ஊழியரின் மனைவி என அந்த பெண் தெரிவித்தார். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அப்போ அது தான் காரணம் என கூறினார். அதற்கு, அந்தப் பெண்மணி, அவர் அரசு ஊழியர் என்றால் என் வயிறு நிரம்பிவிடுமாங்கய்யா என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அங்கிருந்து நகர்ந்தார் முதல்வர் ஸ்டாலின்.
அண்ணாமலை கடும் விமர்சனம்: இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து, விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவோம் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது வெறும் 30 சதவீத மகளிருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது.
எனக்கு ஏன் ஆயிரம் ரூபாய் நீங்கள் வழங்கவில்லை என்று ஒரு சகோதரி முதல்வரை இன்று கேள்வி கேட்டுள்ளார். நீங்கள் இந்த கேள்வியை கேட்பதே தவறு என்று அந்த சகோதரியிடம் முக ஸ்டாலின் சொல்கிறார். இந்த ஆணவம் திமுகவின் பிறவி குணம். தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் திமுகவை இந்த தேர்தலில் முழுமையாக நிராகரிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications