குரங்குனு நான் யாரை சொன்னேன்.. எதற்காக திட்டினேன் தெரியுமா.. பாஜக அண்ணாமலை விளக்கம்
சென்னை: கடலூரில் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
கோவை கார் வெடிப்பு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே, இறந்த முபினின் வீட்டில் எத்தனை கிலோ வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன, அவருக்கு யாருடன் தொடர்பிருக்கிறது உள்ளிட்ட விவரங்களை தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து கோவை சம்பவம் குறித்து ஆலோசனை நடத்திய அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது செந்தில் பாலாஜி, போலீஸாருக்கு முன்பே எல்லா தகவல்களையும் அண்ணாமலை சொல்கிறார்.

அண்ணாமலை
அப்படியென்றால் அண்ணாமலையைதான் என்ஐஏ முதலில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கொந்தித்த அவர் மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள். நான் என்ன சொன்னேன். நீங்கள் சாப்பிடுங்கள், நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று தானே சொன்னேன்.

சாராய அமைச்சர்
இப்படி வந்ததும் ஊரில் நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் சொல்றதை எல்லாம் நான் கேட்டு பதில் சொல்ல முடியாது, நகருங்க என செய்தியாளர்களையும் அமைச்சர் செந்தில்பாலாஜியையும் தரக்குறைவான வார்த்தைகளால் அண்ணாமலை விமர்சித்தார். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அணுகுமுறை
இதுகுறித்து அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களுக்கும் எனக்குமான உறவு அனைவருக்கும் தெரியும். உங்களிடம் எனது அணுகுமுறை எப்படி இருக்கும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடலூரில் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்களுக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் காரியகர்த்தா ஒருவர் உணவு ஏற்பாடு செய்திருந்தார்.

சாப்பிட்டு வாருங்கள்
எல்லாரும் போய் சாப்பிட்டு வாருங்கள் என கூறிவிட்டு நான் காரியகர்த்தாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது என் முன்னாள் மைக்கை நீட்டி இரு பத்திரிகையாளர்கள் சும்மா கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தார்கள். நானும் போய் சாப்பிட்டு வாங்க, நானும் சாப்பிடணும் என சொன்னேன். ஆனாலும் அவர்கள் விடாமல் கேள்வி கேட்டனர். அதனால் அவ்வாறு பேசினேன். நான் எதற்காக அப்படி பேசினேன் என மற்ற பத்திரிகையாளர்களுக்கு தெரியும்.

திமுக ஐடி விங்
ஆனால் திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் இந்த விஷயத்தை பெரிதுப்படுத்துகிறார்கள். அண்ணாமலை பத்திரிகையாளர்களை குரங்கு என அழைத்து விட்டார், அவரை எதிர்த்து போராட்டம் செய்யுங்கள் என உசுப்பேற்றி விடுகிறார்கள் என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அது போல் 4 நாட்கள் கழித்து கோவை கார் வெடிப்பு குறித்து என்ஐஏ விசாரணைக்கு ஏன் தமிழக அரசு தாமதமாக உத்தரவிட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications