எடப்பாடியார் சொல்றது சரி! அதிமுகதான் பெரிய கட்சி! பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. அண்ணாமலை
சென்னை: அதிமுக தலைமையில்தான் கூட்டணி, அதில் எந்த குழப்பமும் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். "மோடியின் தமிழகம்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு பற்றி சுப்ரீம் கோர்ட் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு அளித்துள்ளது.
10% இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து திமுக விஷமத்தனமாக பிரச்சாரம் செய்கிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு கொடுப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரிவித்தார்.

அதிமுக தலைமையில் கூட்டணி
இதைத் தொடர்ந்து அதிமுக தலைமையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

குழப்பம் இல்லை
அதற்கு அண்ணாமலை கூறுகையில், அதிமுக தலைமையில்தான் கூட்டணி. அதில் எந்த குழப்பமும் இல்லை. 2019 இலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணியில் இடம் பெற்றிருந்தோம். எங்கள் கூட்டணியில் அதிமுக பெரிய கட்சி என்பதால் அண்ணன் பழனிசாமி கூறியதில் தவறில்லை.

லோக்சபா தேர்தல்
2024ஆம்ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலின் போது தமிழகத்தில் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்படும். எந்த கட்சி பலமானது என்பது அப்போது தெரியும். பிரதமரின் தமிழக வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல்
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் 5 இடங்களை கேட்டு பெற்றது. ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அதிமுக கூட்டணி சார்பில் ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் மட்டுமே வென்றார். இதைத் தொடர்ந்து அடுத்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது.

பாஜக கணிசமான வெற்றி
பின்னர் இதில் பாஜக கணிசமாக வென்றதை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு பிரச்சினையால் பாஜக தனித்து போட்டியிட்டிருந்தது. எனினும் பாஜகவுடன் தேசிய அளவிலான கூட்டணி அப்படியே இருப்பதாகத்தான் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

51 ஆவது ஆண்டு அதிமுக தொடக்க விழா
இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். இந்த கூட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிள்ளையார் சுழி. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுக அழிந்துவிடும் என்று கூறினார்கள்.

அனைத்து சதி
அதன்பின்னர் அனைத்து சதிகளையும் முறியடித்து ஆட்சி பொறுபேற்றார் ஜெயலலிதா. காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை அதிமுக வழங்கியது. இந்த திட்டங்களை திமுகவால் கொடுக்க முடியுமா? திட்டங்களை நிறுத்திவிட்டீர்கள், இதற்கான தக்க பதிலடியை வரும் தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள். காற்றை தடை செய்ய முடியாதது போல, அதிமுக ஆட்சிக்கு வருவதையும் திமுகவால் தடுக்க முடியாது என பேசியிருந்தார்.

பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள்
கடந்த 2021 இல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 4 எம்எல்ஏக்களை பெற்ற பாஜக, அவ்வப்போது சட்டசபையில் பாஜகதான் எதிர்க்கட்சி என கூறி வந்தது. பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் பாஜகவுக்கும்- அதிமுகவுக்கும் இடையே பெரும் மோதல் போக்கு இருந்து வந்தது. அதிமுக எம்எல்ஏக்களை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவதூறு கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications