விவசாயிகள் பற்றி எந்த அக்கறையும் இல்லை.. உங்களுக்கு கூட்டணிதான் முக்கியம்: திமுகவை விளாசிய அண்ணாமலை!
சென்னை: விவசாயத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல்,வெறும் வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் போக்கை திமுக உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 1970 ஆம் ஆண்டுகளில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் ஏற்பட்ட காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை, 2018ஆம் ஆண்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, கடந்த ஐந்து ஆண்டுகளாக, இரண்டு மாநிலங்களுக்கிடைய, எந்தப் பிரச்சனையும் எழாமல், தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கர்நாடக மாறிலத்தில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதில் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம், தமிழகத்துக்கு 8000 கன அடி தண்ணீர் திறந்து விடக் கூறியும், கர்நாடக மாநில அரசு மறுத்து வருகிறது. காவிரியின் குறுக்கே, கர்நாடக மாநிலம் கட்டியுள்ள அணைகள் அனைத்திலும், மொத்தக் கொள்ளளவில் சுமார் 80 சதவிதம் அளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருக்கையில், மேட்டூர் அணையில், வெறும் 80 சதவீதம் கொள்ளளவே தண்ணீர் இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் நிச்சயம் பாதிக்கப்படும் என்ற நிலை நிலவுகிறது.
ஆனால், திமுக அரசோ, இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், தங்கள் கட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தவோ, கண்டனம் தெரிவிக்கவோ தைரியமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்முருக்கிறது. மேட்டூர் அணையைத் தூர்வாரினால், சுமார் 80 டிஎம்சி கொள்ளளவு அதிகமாக அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்றும்,அதற்கு 8000 கோடி நிதி தேவைப்படும் என்றும், தமிழுக அரசின் நீர்வளத்துறை பரிந்துரை செய்த திட்டத்தை, நீதி இல்லை என்று நிராகரித்திருக்கிறது திமுக அரசு. மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டு திட்டமாக மேட்டூர் அணையைத் தூர்வாரும் திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்திருந்தால், விவசாயிகள் பலனடைந்திருப்பார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்ததும், 1000 தடுப்பு அணைகள் கட்டுவோம் என்று முதல் நிதிநிலை அறிக்கையில் கூறினார்கள். இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டது. எத்தனை தடுப்பு அணைகள் கட்டியுள்ளார்கள்? கடந்த ஆண்டு மட்டுமே, காவிரியில் வந்த தண்ணீரில் 60% தண்ணீர் யாருக்கும் பலனில்லாமல், கடலில் வீணாகச் என்று கலந்தது. தடுப்பு அணைகள் கட்டியிருந்தால், அந்த தண்ணீரைத் தேக்கி வைத்து பயன்படுத்தியிருக்க முடியும். காவிரி நதி, தண்ணீர் இல்லாமல் வறண்டு போனால், மணல் கொள்ளை அடிக்கலாம் என்பதைத் தவிர விவசாயத்தைக் குறித்தும், டெல்டா பகுதிகள் குறித்தும் திமுகவுக்கு எப்போதும் கவலை இருந்ததில்லை.

எதிர்க்கட்சியாக இருந்தபோது, விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக, ஏக்கருக்கு 80,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய திமுக, தற்போது, ஒரு ஹைக்டேருக்கே 18,500 ரூபாய் மட்டும் கொடுப்பதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் இந்த நிதியை, பாதிக்கப்படும் விவசாயிகள் அனைவருக்கும் ஒழுங்காக வழங்குவார்களா என்பதும் கேள்விக்குறி.
விவசாயத்தைப் பற்றி ஏந்த அக்கறையும் இல்லாமல், எந்த தொலைநோக்குத் திட்டங்களையும் தீட்டாமல், வெறும் வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் போக்கை திமுக உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸை வலியுறுத்தி, தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரைப் பெற வேண்டிய கடமையை உணர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
-
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
“இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே”! விஜய்யின் பயிர்க்கடன் ரத்து.. விவசாயிகள் அப்செட் -
பயிர் கடன் ரத்துக்கு வரவேற்பு.. முதல்வர் விஜய்க்கு முக்கிய கோரிக்கை வைத்த ராமதாஸ் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications